இலங்கை முஸ்லிம் திருமண, சட்டத்தில் திருத்தம்..?
இலங்கை முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
1951ம் ஆண்டு முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வயதெல்லை அதிகரிக்கப்பட உள்ளது.
தற்போது 12 வயதான சிறுமிகள் திருமணம் செய்துகொள்ள முஸ்லிம் சட்டத்தில் இடமுண்டு.
இந்த வயது எல்லையை 16 அல்லது 18 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வயதெல்லை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் அது 16 அல்லது 18 வயதா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் திருமணங்கள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 2009ம் ஆண்டு குழுவொன்றை நிறுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவிற்கு முன்னாள் உயர் நீதிமன்ற நீதவான் சலீம் மர்சூக் தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய சில சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Post a Comment