கோத்தபாய மீது தற்கொலை தாக்குதல், பாராளுமன்றத்தில் பொன்சேக்கா சொன்ன புதிய கருத்து
10 வருடங்களுக்கு முன்னர் 2006ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் உள்ளக திட்டம் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாதெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று மோதல் நிலை உருவாகும் முன்னர் உரையாற்றிய சரத் பொன்சேகா,அனுதாபத்தை தேடுவதற்காக கோத்தபாய மேற்கொண்ட உள்ளக திட்டத்தின் அடிப்படையில் இந்ததாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிட்டார்.
எனினும் இந்த தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்று அப்போது கூறப்பட்டது.
இந்தநிலையில் எந்த ஒரு பயங்கரவாதியும் 25 மீற்றர்களுக்கு அப்பால் இருந்து தற்கொலைதாக்குதலை நடத்த முடியாது என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.
Post a Comment