Header Ads



களனி கங்கையின், நீர்மட்டம் குறைகிறது


களனி கங்கையின் நீர்மட்டம் 6 அங்குலம் குறைவடைந்துள்ளதாக தேசிய நீர்பாசன தினணக்களம் தெரிவித்துள்ளது.

களனி கங்கையின் நீர் மட்டம் 7.6 அடியாக நேற்று உயர்வடைந்ததையடுத்து மல்வானை மற்றும் கல்கமுவ உள்ளிட்ட பல பகுதிகள் முற்றாக நீரில்  மூழ்கின.  மேலும் களனி , நவகம்புர, வெல்லம்பிட்டி, அவிசாவளை, ஹங்வெல்ல மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்ட தோடு தற்போதும் நீர் நிறைந்து காணப்படுகின்றது.

குறிப்பாக மலையக பிரதேசங்களில் பெய்துவரும் மழை நீர் அனைத்தும் களனி கங்கைக்கே ஒன்று சேருவதன் விளைவாக களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பதாக தேசிய நீர்பாசன தினணக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.