இலங்கை அணி, இங்கிலாந்து புறப்பட்டது (சம்பள விபரம் இணைப்பு)
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக, இங்கிலாந்து நோக்கி இலங்கை அணி, (04) புறப்பட்டுச் சென்றது.
இங்கிலாந்து அணிக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியனவற்றிலும், அயர்லாந்துக்கெதிரான இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.
இந்தத் தொடருக்காக விளையாடுவதற்கு முன்னர், இலங்கை அணியின் வீரர்கள், சுற்றுலா ஒப்பந்தமொன்றில் இலங்கை கிரிக்கெட் சபையுடன் கைச்சாத்திட்டனர். இலங்கை வீரர்களின் வருடாந்த ஒப்பந்தம், இவ்வாண்டு பெப்ரவரியிலேயே நிறைவடைந்த போதிலும், ஏப்ரல் வரை அது நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இங்கிலாந்துத் தொடருக்கு முன்னதாக, தொடருக்கான ஒப்பந்தத்தில், இலங்கை வீரர்கள் கைச்சாத்திட்டனர்.
இதன்படி, இரண்டு மாதங்கள் நீடிக்கவுள்ள இந்தத் தொடரில், அணியின் முன்னணி வீரர்கள் மூவர், மாதமொன்று 1.5 மில்லியன் ரூபாயும் அடுத்த நிலை வீரர்கள் மாதமொன்றுக்கு 1.2 மில்லியன் ரூபாயும் மூன்றாம் நிலை வீரர்கள், மாதமொன்றுக்கு 1.05 மில்லியன் ரூபாயும் அடுத்த நிலை வீரர்கள் மாதமொன்றுக்கு 900,000 ரூபாயையும் பெறவுள்ளனர். இவை தவிர, போட்டியில் பங்குபற்றுவதற்காக வழங்கப்படும் ஊதியம், மேலதிகமானதாகும்.
Why this colaveri? How much monthly salary to the Excellency President and Prime Minister? From where the government is getting money for that?
ReplyDeleteஇவனுகளுக்காகத்தான் எம்மவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள் சிலநேரம் அடித்துக் கொள்கின்றனர்
ReplyDeleteI thig the salery is not a monthly. It will be one year salary.
ReplyDelete