நிந்தவூரில் இஸ்லாமிய முறையிலான, நிதி நடைமுறைக்கான முஸ்தீபு
-மு.இ.உமர் அலி-
இஸ்லாமிய முறையில் நிதிக்கையாளுகை பற்றிய கலந்துரையாடலொன்று நேற்று 02. ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிந்தவூர் நலன்புரிச்சபையினரின் நிதிப்பிரிவினரின் அழைப்பின் பேரில் இஸ்லாமிய வங்கியியல் துறையில் பிரபலம் வாய்ந்தவரான ஜனாப் முஆத் முபாரக் வளவாளராக கலந்துகொண்டு விடையங்களை அறிமுகம் செய்ததுடன் பங்குபற்றியவர்களது சந்தேகங்களையும் தீர்த்துவைத்தார்.
“இஸ்லாம் கொடுக்கல் வாங்கலில் எவ்வளவு நாகரீகமான முறைகளை அறிமுகம்செய்திருக்கின்றது,வட்டி ஒரு சமூகத்தை எவ்வாறு கெடுத்து , அழித்து விடுகின்றது” என்பது பற்றி வளவாளர் தெளிவாக குறுகிய நேரத்தினுள் விளக்கிக்கூறினார்.
நிந்தவூர் நலன்புரிச்சபை இன்சா அல்லாஹ் வெகு விரைவில் இஸ்லாமிய முறையிலான நிதி நடைமுறையொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment