நீர் விநியோகத்தை நிறுத்த, தீர்மானம் எடுக்கவில்லை - ஹக்கீம்
நீர் விநியோகத்தை நிறுத்த எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
களனி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைவதனால் அம்பத்தலை நீர் விநியோக தாங்கி மாசடையும் என சில தரப்பினர் அச்சம் வெளியிட்ட போதிலும் அவ்வாறான சிக்கல்கள் ஏற்படக்கூடிய சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் நீர் விநியோகத்தை பாதிக்கும் அளவிற்கு நீர் மட்டம் உயர்வடையக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
களனி கங்கையில் எண்ணெய் கலந்திருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment