"பௌத்த பூமியிலுள்ள பள்ளிவாசலை அகற்ற, போராட்டங்களை தொடரவுள்ளோம்"
-விடிவெள்ளி ஏ.ஆர்.ஏ.பரீல்-
முஸ்லிம்கள் கூரகல புனித பூமியில் அமைத்துள்ள ஜெய்லானி பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்தும் அகற்றுவதற்கான தமது போராட்டங்கள் மீண்டும் தொடரப்படுமெனவும் பள்ளிவாசல் பௌத்த புனித பூமியிலிருந்தும் அகற்றப்பட வேண்டுமெனவும் சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.
தமது எதிர்கால நடவடக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
‘நீதிமன்றம் எனக்கும் மேலும் தேரர்களுக்கும் பல தடையுத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. இதனாலேயே கூரகலையை முஸ்லிம்களிடமிருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் பின் தள்ளப்பட்டுள்ளன.
கூரகலையில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டிடங்கள் அகற்றப்பட்டுவிட்டாலும், பள்ளிவாசல் அவ்விடத்திலேயே தொடர்ந்தும் இயங்கி வருகிறது. இப்பகுதி பௌத்த புனித பூமியாகவும் தொல்பொருள் பிரதேசமாகவும் அமைந்துள்ளது. இதனைக் காப்பாற்ற வேண்டியது பௌத்தர்களின் கடமையாகும்.
கூரகலையில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டிடங்கள் அகற்றப்பட்டுவிட்டாலும், பள்ளிவாசல் அவ்விடத்திலேயே தொடர்ந்தும் இயங்கி வருகிறது. இப்பகுதி பௌத்த புனித பூமியாகவும் தொல்பொருள் பிரதேசமாகவும் அமைந்துள்ளது. இதனைக் காப்பாற்ற வேண்டியது பௌத்தர்களின் கடமையாகும்.
என்றாலும் ஒரு சமய நிகழ்வினை ஏற்பாடு செய்து இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.விரைவில் ஒரு 'பின்கம'யை ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கான பௌத்தர்கள் கூரகலைக்குச் செல்லவுள்ளோம். சிங்கள ராவய மற்றும் பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் தற்போது வெளிநாடு சென்றிருப்பதால் அவர்கள் நாடு திரும்பியதும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த காலங்களில் கூரகலையை முஸ்லிம்களிடமிருந்தும் மீட்டெடுப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றாலும் பின்பு அம் முயற்சிகள் பல்வேறு காரணங்களினால் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எமது முயற்சிகளை நாம் மீண்டும் முன்னெடுக்கவுள்ளோம்.எமது போராட்டங்கள் சமய நிகழ்வுகளுடன் ஒன்றிணைந்ததாக இருந்தால் அவற்றை எவராலும் தடை செய்ய முடியாது என்றார்.
Post a Comment