நிவாரணப் பணியில், முஸ்லிம்கள் மும்முரம் - ஒருங்கிணைப்புடன் செயற்படுமாறு ஆலோசனை
-Vidi-
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதிலும் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதிலும் நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் அமைப்புகளும் தனிநபர்களும் மிகவும் துரிதமான முறையில் இயங்கி வருகின்றனர்.
குறிப்பாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் கடந்த மூன்று தினங்களுக்கும் மேலாக முஸ்லிம் அமைப்புகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றன.
இவ் அமைப்புகள் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி பாதிக்கப்பட்ட சகல இன மக்களுக்கும் தமது சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனினும் பல நிறுவனங்கள் நிதி மற்றும் நிவாரண சேகரிப்புகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அவற்றுக்கிடையில் ஒருங்கிணைப்பு அவசியப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மிகவும் திட்டமிட்ட வகையில் தேவைகள் இனங்காணப்பட்டு வளங்கள் பகிரப்படும்பட்சத்தில் கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை இழப்புகளிலிருந்து மீட்டெடுக்க முடியும் என ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அனர்த்த நிவாரணங்களை வினைத்திறனாக முன்னெடுப்பது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே இவ்விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment