புற்றை உடைக்க சென்ற முஸ்லிமை, நல்ல பாம்பு கொன்றது உண்மையா...?
நாகராஜா முஸ்லிமை கொன்றதா? : ஆன்மிகத்தின் பெயரால் மூடநம்பிக்கைகளை பரப்பி இனவாதத்தை தூண்டும் இந்துத்துவா காவிகளின் வலையில் சிக்கும் இந்துக்கள்.
நாகராஜன் தன் புற்றை தகர்க்க வந்த முஸ்லிமை கொன்றதாக இந்துக்களால் தூக்கிக்கிப்பிடிக்கப்பட்டு பரப்பப்படும் செய்தி ஒன்று அண்மையில் அநேக இந்துக்களால் முகநூலில் பகிரப்பட்டும், பதியப்பட்டும் வருகிறது.
இப்பதிவில் எவ்வித உண்மையும் இல்லை. மாறாக இஸ்லாமியர்கள் குறித்து இனவாத கருத்துக்களை பரப்புவதற்கு செய்யப்பட்ட சதிகளில் ஒன்றாகும்.
அறிவார்ந்த பதில் :
உண்மையில் சாதரண அறிவு கொண்டு சிந்தித்தாலே இச்செய்தி ஒரு பொய்யான தகவல் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். ஐயறிவு படைத்த நாகப்பாம்பை யார் தாக்க வந்தாலும் மதத்தை பார்க்காது எதிரியை தாக்கும் என்கிற பாலர் வகுப்பு பாடம் போதும் இச்செய்தி இட்டுக் கட்டப்பது என்பதற்கு போதுமான சான்று.
உண்மையில் நடந்தது :
- இறந்து கிடக்கும் மனிதரின் படம் :
தஞ்சோங் காராங் (மலேசியா) எனும் நகரில் துணிக்கடை ஒன்றின் முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளைக்காரர்களால் கத்தியால் நெஞ்சில் குத்தப்பட்டு மரணமித்த முதியவர் ஆவார். செய்தி இணையச் சுட்டி : http://www.kosmo.com.my/kosmo/content.asp?y=2016&dt=0320&pub=Kosmo&sec=Terkini&pg=bt_17.htm#ixzz43RWUAfNk
- நாகராஜன் படம் :
மங்களூர் அருகே, Gurupura Kaikamba எனும் பிரதேசத்தில் குடியிருப்பு ஒன்றில் காலணி ராக்கில் (Shoe Rack) நுழைந்து காணப்பட்ட 13 அடி இராஜநாகத்தின் படம். செய்திச் சுட்டி : http://www.bangaloremirror.com/news/state/Cobra-in-a-shoe-rack/articleshow/51298488.cms
இவை போன்ற அறிவுக்கு ஒவ்வாத பலவற்றை அநேகர் தங்களது மதங்களை நிருபிக்க பல வலைத்தள மூட நம்பிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.
ஆன்மிக போதை எந்தளவிற்கு படித்தவர்களையும் காவு வாங்கி பொய்யை துணிந்து சொல்ல வைக்கிறது என்று அறியலாம். மதங்கள் மனித சிந்தனையை மழுங்கடிக்க செய்கிறன எனும் சிந்தனையாளர்களின் வாதம் இஸ்லாத்திற்கு பொருந்தாது. இவ்வாறு இஸ்லாத்தை பரப்புங்கள் என்றோ இஸ்லாம் கூறவில்லை. இவ்வாறான தகவல்கள் பரப்புவோர்க்கு (முஸ்லிமோ முஸ்லிம் அல்லாதவரோ) பல எச்சரிக்கைகளை இஸ்லாம் விடுத்துள்ளது.
"ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்."
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (முஸ்லிம் – 06)
"நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல."
– அறிஞர் டால்ஸ்டாய் –
"நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்ப தற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப் படுவீர்கள்." (அல்குர்ஆன் 49:6)
"நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும்." (திருக்குர்ஆன் 49:12)
ethanai putrukai udaithu antha mannil naan rotti oven seygirargal engada pochi naga sami
ReplyDeleteThanks for editor and Jaffna muslim
ReplyDeleteஇது எனது பதிவு. நான் பல சிரமத்துடன் புகைப்படங்களின் உண்மை நிலை தேடிப்பார்த்து இக்கட்டுரையை முக நூலில் பதிவிட்டேன். Jaffna Muslim தளம் மூலம் இப்பதிவு பலரையும் சென்றடையும் இன்ஸா அல்லாஹ். எனது முயற்சி பலரை அடைந்ததற்கு உதவிய தளத்திற்கு மிக்க நன்றி. அல்லாஹ் அருள் புரிவானாக
ReplyDeleteநான் உருவாக்கிய பதிவு. அல்ஹம்துலில்லாஹ். இது தொடர்பில் நான் பல இந்துக்களாலும் விமர்சிக்கப்பட்டேன். காரணம் நான் இந்துவாக இருந்து இஸ்லாத்தை தழிவியவள். இதனால் எனக்கு எச்சரிக்கை விடுக்க பல இந்து நண்பர்கள் இந்து மதத்தை பற்றி பேசினால் நாகராஜன் சும்மா விட மாட்டான் என்று கூறி கிண்டல் செய்தனர். பொய் என்று பார்த்ததும் தெரிந்தது. ஆனால் இந்துக்களுக்கு தக்க பதிலடி கொடுக் சிரமப்பட்டு இரு நாட்களில் புகைப்படங்களின் உண்மை நிலை அறிந்து ஆதாரத்துடன் இக்கட்டுரையை உருவாக்கினேன். அல்லாஹ் இப்பதிவை உங்கள் மூலம் பலருக்கும் கொண்டு சேர்த்துள்ளான். Jazakallahkhair.
ReplyDeleteThoooo....
DeleteGOOD EFORT
ReplyDeleteIf you're posting a link it has to accessible unlike here it's inaccessible.
ReplyDelete