"வெப்பம்" பாடசாலைகளை நேரத்திற்கு மூடுவது தொடர்பில் மத்திய + மாகாண அரசு மோதல்
இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் இந்த வாரம் முதல் நண்பகல் 12 மணியுடன் மூடப்படுகின்றன.
ஆனாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேசிய பாடசாலைகள் வழக்கம்போல் இயங்குகின்றன.
மாகாண சபைகளினால் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை உடனடியாகக் கைவிடுமாறு மத்திய அரசின் சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆராய்ந்த பின்னர் அதனைக் கைவிடுமாறு உரிய மாகாண சபைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் நேர அட்டவணையில் எந்நவொரு மாற்றமும் ஏற்படுத்தப்படாது என மத்திய கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சின் இந்தத் தீர்மானம் குறித்து கவலை வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண தழிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எஸ் ஜெயராஜா இதனை மாகாண சபையின் நிர்வாகத்தின் மீதான மத்திய அரசின் தலையீடாக பார்ப்பதாக தெரிவித்தார்.
பகலில் 11.30 முதல் 1.30 க்கு இடைப்பட்ட நேரத்தில் அதிக வெப்பம் உணரப்படுவதால் அந்த நேரத்தில் மாணவர்களை வெளியில் நடமாடுவதை குறைக்குமாறு மத்திய கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
வகுப்பறைகளில் காற்றோட்டம் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தல் கழுத்துப்பட்டி அணிய வேண்டும் என்ற விதியை தளர்த்துதல் போன்ற மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகவும் மத்திய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

"கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை" யே என நினைக்கும் மாணவர்களும் இன்னும் சிலரும்...........
ReplyDeleteஎது எப்படியோ..............அதிகாரம் யார் கையில் ???
அதிகாரத்தை எப்படி அமுல்படுத்த, நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்நிகழ்வு எமக்கு போதிக்கின்றது...........