Header Ads



வாட்ஸ்அப்புக்கு 72 மணி தடைவிதித்த நீதிபதி

குற்றவியல் வழக்கு ஒன்றில் தகவல்களைத் தர மறுத்த வாட்ஸ்அப் நிர்வாகத்தைக் கண்டித்து, பிரேசிலில் அடுத்த 72 மணி நேரத்துக்கு வாட்ஸ் அப் பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டார் அந்நாட்டு நீதிபதி.

செர்ஜிபி நகர நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் மார்சல் மாண்டால்வோ, குற்ற வழக்கு ஒன்றுக்காக உரிய தகவல்களைத் தர வாட்ஸ் அப் சேவையை நிர்வகிக்கும் பேஸ்புக் நிறுவனம் மறுத்ததால், திங்கட்கிழமை காலை முதல் வாட்ஸ் அப் சேவைக்கு 72 மணி நேர தடை விதித்து உத்தரவிட்டார்.

இது குறித்து வாட்ஸ் அப் நிர்வாகம் கூறுகையில், எங்களிடம் தகவல்கள் இல்லை என்று கூறியும், எங்களிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக, ஏராளமான பிரேசில் மக்களை வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாமல் தண்டித்துவிட்டனர்.

பொதுமக்கள் அனுப்பும் எந்த தகவலும் எங்கள் சர்வரில் இல்லை. எங்கிருந்து அனுப்பப்படுகிறதோ, அது சென்று சேரும் இடத்தில் மட்டுமே அந்த தகவல் இருக்கும். வேறு யாராலும் அதைப் படிக்க முடியாது.நாங்களும் கூட என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.