Header Ads



6 ஜனாஸாக்கள் நல்லடக்கம் - ஆறுதல்கூறாத முஸ்லிம் அரசியல்வாதிகளும், மக்களின் கோரிக்கையும்


 -விடிவெள்ளி ARA.Fareel-

கடு­கண்­ணாவ ரம்­ம­லக்க  பகு­தியில் இடம்­பெற்ற மண்­ச­ரிவு அனர்த்­தத்தில்  சிக்­குண்டு காணாமற் போய்  மீட்­டெ­டுக்­கப்­ப­டா­தி­ருந்த இரு­வரின்  ஜனா­ஸாக்கள் நேற்று -19- மாலை மீட்­கப்­பட்டு நல்­ல­டக்கம்  செய்­யப்­பட்­டது.

இவ்­வ­னர்த்­தத்தில் இரு குடும்­பங்­களைச்  சேர்ந்த ஆறு பேர் உயிர் இழந்­துள்­ளனர்.

அறு­வரின் ஜனா­ஸாக்­களும் ரம்­ம­லக்க தக்­கியா மைய­வா­டியில் அரு­க­ருகே நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளது. மைய­வா­டியும் மண்­ச­ரிவு அபா­யத்தை எதிர்­நோக்­கி­யுள்ள நிலையில் ஓர்  ஒதுக்­குப்­பு­ற­மாக அறு­வரின் ஜனா­ஸாக்­களும் நல்­ல­டக்கம்  செய்­யப்­பட்­டுள்­ளது.

நேற்று வியா­ழக்­கி­ழமை மும்தாஜ் பேகம் (50) எனும் தாயி­னதும் அவ­ரது மகன் ரஸ்வின் (23) ஆகிய இரு­வ­ரதும் ஜனா­ஸாக்­களே மீட்­கப்­பட்­டன. ரஸ்வின் அமானா வங்­கியில் கம்­பளை கிளையில் கட­மை­யாற்றி வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ரம்­ம­லக்க பகுதி மலைக்­குன்றில்  அமைந்­தி­ருந்த மூன்று வீடுகள்  செவ்வாய் நள்­ளி­ரவு 12.15 மணி­ய­ளவில்  மண்­ச­ரி­வுக்கு இலக்­காகி நிலத்தில் புதை­யுண்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 

செவ்­வாய்க்­கி­ழமை சபீனா  பேகம் (42) என்ற தாயினதும் சிஹான் (10) எனும் மகனினனும் ஜனா­ஸாக்கள் மீட்­கப்­பட்டு நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. புதன்­கி­ழமை சபீக் (15) மற்றும் அம்ஜாத்  (15) ஆகிய இரு ஜனா­ஸாக்கள் மீட்­கப்­பட்டு நல்­ல­டக்கம்  செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மீட்புப் பணி­களில் அனர்த்தம் நிகழ்ந்த கணத்­தி­லி­ருந்து ஈடு­பட்­டு­வரும் ரம்­ம­லக்­கவைச்  சேர்ந்த சியாம் சாதரை தொடர்பு கொண்டு  விடி­வெள்ளி விப­ரங்கள் வின­வி­ய­போது அவர் தனது   ஆதங்­கத்தை  இவ்­வாறு வெளி­யிட்டார்.

முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி அமைச்­சர்­களும்,  எம்.பி.க்களும் பலர்  இருந்­தாலும்  அனர்த்­தத்­தினால்  பாதிக்­கப்­பட்ட  மக்­களை  வந்து  சந்­தித்து ஆறுதல் வார்த்­தை­யா­வது  கூற­வில்லை. அமைச்சர் ஹலீம்  மாத்­திரம்  தொலை­பேசி மூலம்  தொடர்பு கொண்­ட­துடன்  அவ­ரது  இணைப்புச் செய­லா­ளரை அனுப்பி வைத்­தி­ருந்தார்.

இந்த அனர்த்­தத்­துக்கு இந்த  மலையின் அடுத்த பகு­தியில் கருங்கல் உடைக்கும் தொழில்  நடை­பெ­று­வதும்  ஒரு கார­ண­மாகும். கருங்­கற்­பா­றைகள்  வெடி­வைத்து தகர்க்­கப்­ப­டு­கின்­றன.

இது நீண்­ட­கா­ல­மாக நடை­பெற்று வரு­கி­றது. கருங்­கற்­பாறை வெடி­கொண்டு தகர்க்­கப்­ப­டும்­போது வீடுகள் நடுக்­கத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளன.

இது பற்றி சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு முறைப்­பாடு செய்தும் எது­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

கருங்­கற்­பாறை அதிர்­வினால் மண் இல­கு­வாகி மழை­பெய்­த­மையால் சரி­வுக்­குள்­ளாகி அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ளது. இப்­ப­கு­தியில் சுமார் 200 வீடுகள் இருக்­கின்­றன.

80 வீடு­களைச் சேர்ந்த குடும்­பங்­களே அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் வெளி­யே­றி­யுள்­ளன.  இக்­கு­டும்­பங்கள் மலையின்  நடுப்­ப­கு­தியில் வாழ்­கின்­ற­வை­யாகும்.

ஆனால் மலை­ய­டி­வா­ரத்தில்  குடி­யி­ருக்கும் மக்கள் தமக்கு ஆபத்து ஏற்­ப­டாது எனக்­கூறி அங்­கி­ருந்து வெளி­யே­றா­தி­ருக்­கின்­றனர்.

இப்­ப­குதி மக்­க­ளுக்கு நிவா­ரண உத­விகள் தொடர்ந்து  வழங்­கப்­ப­ட­வேண்டும்.  நஷ்ட ஈடு வழங்­கப்­ப­ட­வேண்டும்.

 இப்­ப­குதி மக்கள் முஸ்­லிம்கள் அவர்கள் வச­தி­யான ஓர் இடத்தில் இடம்­பெ­யர்ந்து  வாழ்­வ­தற்கு அர­சாங்கம்   காணி ஒதுக்கித் தரவேண்டும்.

லக்கி ஜயவர்த்தன, மயந்த திசாநாயக்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைதந்து நிவாரண உதவிகளை  வழங்கினார்கள். மத்திய மாகாண ஆளுநர் ஸ்தலத்துக்கு வந்து உலர் உணவுப் பொதிகளை வழங்கினார்.

மக்கள் தமது வாழ்க்கையை மீள புதிதாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்கு அரசாங்கம் ஆவன செய்யவேண்டும் என்றார்.

1 comment:

  1. Government must declare the Buffer Zone policy not only in the seashore site but but also wanted in the mountain areas.

    Don't permit to live peoples in the mountain site. Immediately resettle them in the land site areas.

    ReplyDelete

Powered by Blogger.