Header Ads



எதிர்­வரும் 6 மாதத்­திற்கு, வாகன இறக்­கு­ம­தி இடைநி­றுத்­தம்

ரூபாவின் பெறு­ம­தியின் தொடர்ச்­சி­யான வீழ்ச்சி மற்றும் அந்­நியச்செலா­வ­ணியின் தளம் பல் நிலை கார­ண­மாக எதிர்­வரும் ஆறு மாத காலத்­திற்கு வாகன இறக்­கு­ம­தியை இடைநி­றுத்­தி­யுள்­ள­தாக வாகன இறக்­கு­ம­தியாளர் சங்­கத்தின் தலைவர் இந்­திக சம்பத் மொரச்­சிகே தெவித்தார்.

நாடு தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள பொரு­ளா­தார சிக்கல் நிலையை சரி செய்ய அந்­நிய செலா­வணி இருப்பை அதி­க­ரிப்­ப­தற்­கா­கவும் வாடிக்­கை­யா­ளர்­களின் நன்­மை­யினை கருத்தில் கொண்டும் தமது சங்கம் இத்­தீர்­மா­னத்தை எடுத்­த­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

இலங்கை தேசிய வர்த்­தக சங்­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­துக்­கொண்டு கருத்து தெரி­விக்கையிலேயே அவர் இதனை தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது

இலங்கை ரூபாவின் பெறு­மதி வீழ்ச்­சி­யினால் வாகன இற்­கு­ம­தி­யா­ளர்கள் பாரிய அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றனர். அதே போல் ஜப்­பான் யென்னின் பெறு­மதி வீழ்ச்­சியும் வாகன இறக்­கு­ம­திக்கு பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதனால் இறக்­கு­மதி செய்­யப்­படும் சிறிய வகை­யி­லான ஹைபிரிட் வகை வாக­னங்­க­ளுக்கு மூன்று இலட்சம் தொடக்கம் ஐந்து இலட்சம் ரூபா வரை அதி­க­மான விலை மாற்றம் ஏற்­ப­டு­கின்­றது.

அதே போல் வாகன கொள்­வ­னவின் போது அதி­க­மாக டொலரின் மூல­மா­கவே கொடுக்கல் வாங்கல் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன இவ்­வா­றான நிலையில் டொல­ருக்க எதி­ராக ரூபாவின் பெறு­ம­தி­யா­னது அண்­மைக்­கா­ல­மாக வீழ்ச்­சியை சந்­தித்து வரு­கின்­றது. இந்­நிலை கார­ண­மாக உள்­நாட்டு சந்­தையில் வாக­னங்­களின் விலை அதி­க­ரிப்­பதால் வாடிக்­கை­யா­ளர்­களும் வியா­பா­ரி­களும் பாரிய நட்­டத்தை எதிர் நோக்­கு­கின்­றனர்.

வாக­னங்­களின் விலை மாற்றம் மற்றும் விலை அதி­க­ரிப்­புக்கு அண்­மைக்­கா­லங்­களில் அர­சாங்­கத்தின் வரி திருத்­தத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட சீர்த்­தி­ருத்­தங்­களும் கார­ண­மாக அமைந்­தி­ருந்த போதிலும் வற்­வரி அதி­க­ரிப்பு வாகன விலையில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை. எனினும் அந்­நிய செலா­வ­னியில் ஏற்­பட்ட தளம்பல் நிலை வாகன விலையில் பாரிய தாக்­கத்தை செலுத்­தி­யது.

இந் நிலையை கருத்தில் கொண்டு உள்­நாட்டு வியா­பா­ரி­களை பாதுக்­காப்­ப­தற்­காக எதிர்­வரும் 6 மாத காலத்­திற்கு வாகன இறக்­கு­ம­தியை இடை­நி­றுத்­து­வ­தற்கு இலங்கை வாகன இறக்­கு­ம­தி­யாளர் சங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இதன் பிர­காரம் எமது சங்­கத்தில் அங்கம் வகிக்கும் 500 க்கும் அதி­க­மாக உறுப்­பி­னர்கள் இத்­தீர்­மா­னத்­திற்கு உடன் பட்டு இறக்­கு­ம­தியை இடை­நி­றுத்­தி­யுள்­ளனர்.

எனினும் இது­வ­ரைக்­கா­லமும் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட வாக­னங்கள் சந்­தையில் கையி­ருப்பில் உள்­ள­மை­யினால் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பழைய விலை­யி­லேயே வாக­னங்­களை கொள்­வ­னவு செய்யும் வாய்ப்பு உள்­ளது.எதிர்­வரும் காலங்­களில் வாகன இறக்­கு­ம­தியை ஆரம்­பித்­ததும் அவற்றின் விலை அதி­க­ரிப்­ப­தற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­வதால் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வாக­னங்­களை கொள்­வ­னவு செய்ய இது­சி­றந்த கால­ம் என நான் கருதுகின்றேன்.

அத்துடன் வாகன இறக்குமதிக்காக அதிகளவான அந்நிய செலாவனியை பயன்படுத்துகின்றோம். எனவே நாம் வாகன இறக்குமதியை இடைநிறுத்திமையினால் எமது நாட்டின் அந்நிய செலாவனி கையிருப்பை அதிகரித்து அதன் மூலம் பொருளாதார வலுவூட்டலுக்கு எம்மால் பங்களிப்பு வழங்க முடியும் என எமது சங்கம் நம்புகின்றது.

No comments

Powered by Blogger.