Header Ads



31 விரல்களுடன் பிறந்துள்ள குழந்தை


சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது என்ற மகிழ்ச்சியான செய்திக்கு இடையே மிகவும் அதிர்ச்சிகரமான சோக நிகழ்வும் நடந்தது. 

பிறந்த அந்த குழந்தைக்கு பொதுவாக கை, கால்களில் இருக்கும் 20 விரல்களுக்கு பதிலாக மொத்தம் 31 விரல்கள் இருந்தன. 

2 கைகளில் 15 விரல்களும், கால் பாதங்களில் 16 விரல்களும் உருவாகி இருந்தன. இவற்றில் ஒரு கையில் 8 விரல்களும், மற்றொன்றில் 7 விரல்களும் உள்ளன. கால்களில் தலா 8 விரல்கள் இருக்கின்றன. ஆனால் கை, கால்களில் பெருவிரல்கள் இல்லை. 

இக்குழந்தையை ‘ஹாங்காங்’ என அழைக்கின்றனர். இதுபோன்று அதிக விரல்களுடன் ஆயிரத்தில் ஒரு குழந்தை பிறப்பதாக சீன டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, குழந்தையின் தாய்க்கும் இது போன்று கால், கைகளில் அதிக அளவில் விரல்கள் உள்ளன. எனவே, மரபு வழியாக குழந்தைக்கும் அதிக அளவில் விரல்கள் உருவாகி இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கை, கால்களில் அதிக விரல் இருப்பதால் குழந்தை ஹாங்காங் மிகவும் சிரமப்படுகின்றான். எனவே சிகிச்சை மூலம் அதை சீரமைக்க முடிவு செய்துள்ளனர். குழந்தை ஹாங்காங்கின் தந்தை ஷோயு ஷெஸ்லின் ஏழை. எனவே தனது மகன் சிகிச்சைக்கு உதவும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.