Header Ads



பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க 2 எம்.பி.க்களுக்கு ஒரு வாரகாலத் தடை


பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு ஒருவார காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த மூன்றாம் திகதி நடைபெற்ற மோதலை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்தை முன்னிட்டு இந்த மோதல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றத்திற்குள் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் நேற்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிக்கையின் பிரகாரம் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மற்றும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு இன்று தொடக்கம் ஒருவாரகாலத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.