வசீம் தாஜூடீன் கொலை, 180 பொலிஸாரிடம் வாக்குமூலம்
ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடரபில் 180 பொலிஸ் சாட்சியாளர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய 2012ஆம் ஆண்டு மே மாதம் வரை நாரஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சேவை செய்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெறப்படவுள்ளன. இந்நிலையில் அவர்களில் அதிகமானவர்களிடம் இதுவரையில் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்போதைய நாரஹென்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சூலா டி சில்வா குற்றப் புலனாய்வு பிரிவிடம் வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில், கொழும்பு பிரதேச போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பிரதி பொலில் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன இது தொடர்பில் குற்றப் புலாய்வு பிரிவிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தின் பிரதான இரண்டு நபர்களான அப்போதைய நாரஹென்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் அதிகாரி டேமியன் பெரேரா மற்றும் அவருக்கு உத்தரவிட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க ஆகியோர் இன்னமும் குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்படவில்லை.
வசீம் தாஜூடின் கொலை விசாரணை மற்றும் கைது தொடர்பில் ஆர்வம் காட்டும் தரப்பினர் நீதியை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் காட்டுவதில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விசாரணையை தொடர்ந்து ஊடக கண்காட்சியாக்காமல் அனைத்து சாட்சிகளையும் ஆராய்ந்து காலம் தாமதிக்காமல் குற்றவாளிகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment