Header Ads



மல்வானையில் பெரும் நெருக்கடி, 12 அடி வெள்ளம், மக்கள் பரிதவிப்பு (படங்கள்)


-மல்வானையிலிருந்து மொஹமட் பைரூஸ்
பிரதம ஆசிரியர், விடிவெள்ளி-
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக மல்வானை பிரதேசம் முற்றாக நீரில் மூழ்கியதோடு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மல்வானை பிரதேசத்தின் ரக்ஷபான, காந்திவெவ, உலஹிட்டிவல, விதானகொட, பங்காளஹேன,  உட்பட பல பகுதிகள் நீரில் முழ்கியுள்ளன. சீரற்ற காலநிலை வழமைக்கு திரும்பியுள்ள போதும் குறித்தப் பகுதிகளில்  சுமார் 12 அடி வரை நீர்மட்டம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட 2500க்கு அதிகமான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள போதும் இதுவரை அரசியல்வாதிகள் எவரும் வந்து தம்மை பார்வையிடவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மல்வானையும் ஒன்றாகும். தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தமானது அந்த மக்களை புரட்டிப் போட்டுள்ளது.

மக்களுக்கு உலருணவு ஓரளவு கிடைத்து வருகிற போதிலும்  இன்னும் உதவிப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்படுகிறது.
அதேவேளை வெள்ளம் வடிந்தோடிய பின்னர் அடுத்தது என்ன என்ற கேள்வி மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. இந்தநிலையில் மல்வானைப் பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிடல் செயற்பாடுகளும், ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளும் அவசியப்படுகிறது. இந்தநிலையில் முஸ்லிம்கள் அதிகளவு வாழும் பிரதேசங்களில் ஒன்றான மல்வானையை வழமைக்கு கொண்டுவர நம் சகலரினதும் ஒத்துழைப்பும், உதவியும் பிரதானமானதாகும்..!




No comments

Powered by Blogger.