இலங்கையில் Wi Fi வசதியை, மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் பேச்சு
இலங்கையில் வைபை வசதியை மேலும் விரிவுபடுத்துவதற்காக கூகுள் பலூன் வேலைத் திட்டத்தை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் அமெரிக்காவின் Social Capital நிறுவனத்தின் நிறுவுனரான ஷமத் பலிஹபிட்டிய இன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் வைபை வசதியை மேலும் வலுப்படுத்தும் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கடந்த வருடம் ஜூன் 28ம் திகதி கூகுள் மற்றும் ஐ.சீ.டி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தமிடப்பட்டது.
இதேவேளை, இன்றைய சந்திப்பில் இந்த வேலைத் திட்டத்தை பாதுகாப்பு பிரிவுக்கு பயன்படுத்து கூடிய வழிமுறை, பாதுகாப்பு முறைகள் குறித்தும் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அமைச்சர் ஹரீன் பிரணாந்தும் இணைந்து கொண்டார்.

Post a Comment