UNP யில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இன்று கூடியுள்ள அக் கட்சியின் செயற்குழுவிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக ஹரீன் பிரணாந்து நியமிக்கப்பட்டுள்ளதோடு, லக்வனிதா முன்னணியின் தலைவராக பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் பதவி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் முன்னணியின் தலைவராக கவிந்த ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment