T 20 உலகக் கோப்பை, உணர்த்திய உண்மைகள்
முன்னணி அணிகளை துவம்சம் செய்து யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இங்கிலாந்து - வெஸ்ட் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதிபெற, பைனலில் கடைசி ஓவரில் நம்பமுடியாத ஷாக் தந்து, கோப்பையை கைப்பற்றி 'சாம்பியன்' டான்ஸ் போட்டார்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். கோப்பையை வெல்லும் என கருதப்பட்ட அணிகள் சறுக்கியது எப்படி? ஒவ்வொரு அணியின் பிளஸ் -மைனஸ் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க....
3. இலங்கை
பிளஸ்: இலங்கை அணி, தற்போது அணியை மீண்டும் கட்டமைக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறது. முன்னணி வீரர்கள் சொதப்பினாலும் வான்டர்சே, ஷனகா , சமீரா போன்றோர் நம்பிக்கை தரும் விதத்தில் விளையாடினார்கள்.
மைனஸ்: இந்த உலகக்கோப்பையில் மிக மோசமாக விளையாடிய அணி இலங்கைதான். ஆப்கனை தத்தி தத்தி வென்றாலும், மற்ற அனைத்து போட்டியிலும் தோல்வியை தழுவியது முன்னாள் சாம்பியன் இலங்கை. நடுவரிசை ஆட்டக்காரர்கள் மிகவும் சொதப்பினார்கள். திரிமன்னே, ஒரு போட்டியில் கூட பத்து ரன்களை தாண்டவில்லை. பார்ட்னர்ஷிப் போடுவதில் சொதப்பி தள்ளியது இலங்கை அணி. மன ரீதியாக மிகவும் சோர்ந்து போய் நம்பிக்கையின்றி விளையாடியதே தோல்விக்கு முக்கிய காரணம். இலங்கை அணிக்கு முதலில் புத்துணர்ச்சி முகாம் நடத்த வேண்டியது அவசியம்.
4. பாகிஸ்தான்
பிளஸ்: ஷர்ஜீல்கான், இமாத் வாசிம், அஃப்ரிடி, முகமது ஆமீர் ஓரளவு சிறப்பாக விளையாடினார்கள். அதை தவிர பிளஸ் என சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.
மைனஸ்: அணியில் இருக்கும் அனைவரும் ஒழுங்காக பேசிக் கொள்ளவே இல்லை. உமர் அக்மல் நான்காவது நிலையில் கூட ஒழுங்காக விளையாடாத நிலையில். மூன்றாம் நிலையில் தன்னை இறக்க வேண்டும் என அடம் பிடித்தார். ஹபீஸ் - அப்ரிடிக்கு இடையே ஒற்றுமையில்லை. இப்படி அணியிலேயே பல பிளவுகள் இருந்தன. முகமது அமீர் தவிர மீதி யாரும் முழு உழைப்பை கொட்டவே இல்லை. நன்றாக பேட்டிங் செய்யக்கூடிய சர்ப்ராஸ் அகமதுக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. வெற்றி பெற வேண்டும் என்றே வெறியே இல்லாமல் விளையாடியதுதான் மைனஸ்.
5. ஆஸ்திரேலியா
பிளஸ்: சிறந்த பேட்ஸ்மேன்கள்தான், சிறப்பான அணிதான், ஓரளவு நல்ல பந்துவீச்சும் இருக்கிறது. நல்ல ஆல் ரவுண்டர்களும் இருக்கிறார்கள். இதெல்லாமே பிளஸ்தான். உஸ்மான் கவாஜா சீராக நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தார். எந்தவொரு போட்டியையும் பாசிட்டிவாக ஆரம்பித்தது நல்ல விஷயம். கவாஜா, ஜாம்பா அறிமுக உலகக்கோப்பை தொடரிலேயே அசத்தினார்கள்.
மைனஸ்: குபீரென விக்கெட்டுகள் சரிவதுதான் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மைனஸ். இந்தியாவுடன் ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டிய நிலையில் இருந்து, தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்ததும் அப்படியே முடங்கிபோனது. ஜாம்பா நன்றாக வீசினார். மேக்ஸ்வெல் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக பயன்படுத்தினாலும், அணியில் இரண்டு தரமான பந்துவீச்சாளர்களை எடுக்காதது நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தியாவுடன் நன்றாக வீசிக்கொண்டிருந்த ஜாம்பாவை, கேப்டன் ஸ்மித் சரியாக பயன்படுத்தவில்லை. அடிக்கடி பேட்டிங் வரிசையை மாற்றியது ஆஸிக்கு பின்னடைவாக போனது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஸ்மித், தனது கேப்டன்சியை ஒழுங்காக செய்யவில்லை என்பதே நிதர்சனம். அதற்கான பரிசுதான் அரையிறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் போனது.
8. இந்தியா
பிளஸ்: விராட் கோலி தனது கேரியரின் உச்சக்கட்ட பெர்பார்மென்ஸில் இருக்கிறார். விராட் கோலி களத்தில் நின்றால், இந்தியா எவ்வளவு பெரிய இலக்கையும் சேஸ் செய்துவிட முடியும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஆறாவது நிலையில் இறங்கி விளையாடிய தோனிதான் இம்முறை விராட் கோலிக்கு அடுத்ததாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இருக்கிறார். கேப்டன்சி, விக்கெட் கீப்பிங்கிலும் மெர்சலாக்கினார் தோனி. நெஹ்ரா ஒரு போட்டியில் கூட நான்கு ஓவர் வீசி முப்பது ரன்களை கூட விட்டுத்தரவே இல்லை. பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளத்தில் கூட மிகசிறப்பாக வீசினார். ஓவருக்கு சராசரியாக வெறும் 5.95 ரன்களையே விட்டுதந்தார். இந்திய டி20 அணியில் நெஹ்ரா நிரந்தர இடம் பிடித்தாலும் ஆச்சர்யம் இல்லை.
மைனஸ்: தனிப்பட்ட மேட்ச் வின்னர்களை நம்பியே இருந்ததுதான் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம். அரையிறுதி போட்டி தவிர, மீதி போட்டிகளில் எப்போதுமே தொடக்க வீரர்கள் சொதப்பினர். நடுவரிசையில் ரெய்னா பலம் சேர்க்கவில்லை. யுவராஜுக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. மற்ற அணிகளில் எல்லாம் எட்டு, ஒன்பதாம் நிலையில் கூட வீரர்கள் களமிறங்கி சிக்ஸர்கள் விளாசுகிறார்கள். ஆனால் இந்திய அணியில் ஆறு விக்கெட் விழுந்துவிட்டால் அவ்வளவுதான். எந்த காலகட்டத்திலும் ஆல்ரவுண்டர் என ஏற்றுக்கொள்ளவே முடியாத அளவுக்கு மோசமாக பேட்டிங் செய்கிறார் ஜடேஜா. இதனால் கோலி, தோனிக்கு அதிக பளு ஏற்படுகிறது. பந்துவீச்சில் அஷ்வின் இந்த தொடர் முழுவதும் மிக சுமாராகவே பந்து வீசினார். கட்டுக்கோப்பாக பந்துவீசக் கூடிய, அதே சமயம் சிக்ஸர்களை விளாசும் திறன் படைத்த ஹர்பஜனுக்கு தோனி வாய்ப்பு கொடுக்கவே இல்லை. அணியில் ஒரு வீரர் தொடர்ந்து நன்றாக விளையாடாவிட்டாலும், அணியை மாற்றமாட்டேன் என தோனி அடம்பிடித்தது ஒரு வகையில் அவருக்கும் மற்ற வீரர்களுக்குமே நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.
9. இங்கிலாந்து
பிளஸ்: அதிரடியான பேட்ஸ்மேன்கள், நேர்த்தியாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன்கள், நல்ல ஆல்ரவுண்டர்கள் பாசிட்டிவான விஷயங்கள். மொயின் அலி, ஸ்டோக்ஸ், வில்லி என மூன்று தரமான ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் இங்கிலாந்து பயப்படாமல் விளையாடியது. கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணியாகவே விளங்கியது இங்கிலாந்து.
மைனஸ்: கேப்டன் மோர்கன் மிக மோசமான பார்மில் இருக்கிறார், அலெக்ஸ் ஹெல்ஸ் சொதப்பல் ஆட்டம் ஆடுகிறார். பெரிதும் எதிர்பார்பார்க்கப்பட்ட அடில் ரஷித், விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. கேப்டன் மோர்கனின் கேப்டன்ஷிப் யாருமே கணிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. எதன் அடிப்படையில் ஒரு பவுலரை பந்துவீச அழைக்கிறார் அல்லது ஒரு பவுலரை புறக்கணிக்கிறார் என்பதே புரியாத புதிராக உள்ளது. இங்கிலாந்து இறுதி போட்டிக்கு வந்திருந்தாலும் அதில் மோர்கனின் பங்கு மிக சொற்பமே. பீல்டிங்கிலும் இங்கிலாந்து சுமாராகவே செயல்பட்டதை மறுக்க மடியாது.
10. வெஸ்ட் இண்டீஸ்
பிளஸ்: எந்த தனிப்பட்ட வீரரையும் நம்பி அணி இல்லை என்பதே மிகப்பெரிய பிளஸ்தான். அணியில் 9 பெரிய ஹிட்டர்கள் இருக்கிறார்கள். நீளமான பேட்டிங் வரிசையும், திறமையான ஆல்ரவுண்டர்களாலும் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் வசமானது. ஸ்லோ பால் வீசுவதில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். இதனால் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் எதிரணி பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்கள் விளாச மிகவும் கஷ்டப்பட்டார்கள். சாம்வேல் பத்ரியின் அபாரமான பந்துவீச்சும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் துடிப்பான பீல்டிங்கும் கோப்பையை சாத்தியமாக்க முக்கிய காரணம். கேப்டன் சமிக்கு செம அதிர்ஷ்டம் இருந்தது. தொடர்ந்து 10 போட்டியில் டாஸ் ஜெயித்திருக்கிறார். இந்த உலகக்கோப்பையில், நியூசிலாந்து அணிக்கு அப்படியே நேர்மாறாக டாஸ் வென்று ஆறு முறையும் சேஸிங் எடுத்தார் சமி.
மைனஸ்: சாமுவேல்ஸ் தவிர ஃபூட் வொர்க் மற்ற வீரர்களிடம் சுத்தமாக இல்லை. சுழற்பந்துக்கு சாதகமான நாக்பூர் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறியதை பார்க்க முடிந்தது. ஆப்கானிஸ்தானின் பகுதி நேர பந்துவீச்சாளர்களிடம் பம்மினர் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள். கெயில், ஒரு போட்டியை தவிர மற்ற போட்டிகளில் இருபது ரன்களை கூட அடிக்கவில்லை. நேர்த்தியான பேட்டிங் இல்லாமல் போனது ஒரு சிறிய மைனஸ்.
-பு.விவேக் ஆனந்த்

Post a Comment