பாகிஸ்தான் T 20 அணி கேப்டனாக, சர்பிராஸ் அகமது நியமனம்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து சாகித் அப்ரிடி ராஜினாமா செய்தார். தனது ஆலோசனைகளை கேட்க மறுத்ததாகக் கூறி பயிற்சியாளர் வாக்கார் யூனிசும் பதவி விலகினார்.
இந்நிலையில் அப்ரிடிக்குப் பதிலாக டி20 அணியின் கேப்டனாக சர்பிராஸ் அகமதுவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று -05- நியமித்துள்ளது. கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அவருக்கு டி20 அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான், சர்பிராஸ் அகமதுவை தொடர்பு கொண்டு அவரை கேப்டனாகத் தேர்வு செய்தது குறித்து தகவல் தெரிவித்து வாழ்த்து கூறியுள்ளார்.
28 வயதாகும் சர்பிராஸ் அகமது, 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாட 1296 ரன்கள் எடுத்து, சராசரி 46.28 வைத்துள்ளார். 58 ஒருநாள் போட்டிகளில் 1077 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 29.91. டி20 போட்டிகளைப் பொருத்தவரை, 21 போட்டிகளில் விளையாடியுள்ள அகமது, 291 ரன்கள் (சராசரி 29.10) எடுத்துள்ளார்.
Post a Comment