Header Ads



அட்டாளைச்சேனையில் O/L பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான, வழிகாட்டல் கருத்தரங்கு

அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் கல்விப் பிரிவு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் தேசிய உளவளத்துணை மையத்துடன் இணைந்து இவ்வருடம் க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துள்ள மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் கருத்தரங்கினை 06.04.2016 புதன்கிழமை அன்று பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் கலாச்சார மாநாட்டு மண்டபத்தில் காலை 8.00 மணி தொடக்கம் 12.00 வரை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் துறைசார் நிபுணர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்குவதோடு அனைத்து பாடங்களிலும் யு தர சித்தி பெற்ற சாதனை மாணவர்கள் பாராட்டி கௌரவிப்படவுள்ளனர். 'குறிப்பாக இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதன் முக்கிய நோக்கம் மாணவர்கள் பெறுபேறுகள் வருவதற்கு முன்னரே உயர்தர பிரிவுகள் தொடர்பான போதிய அறிவு வழிகாட்டல் இல்லாமல் தமக்கான உயர்தர பிரிவுகளைத் தெரிவு செய்து கொண்டு டியூசன் வகுப்புக்களுக்கு சென்லுகின்றனர். இது எதிர்காலத்தில் அவர்களது வாழ்க்கையில் பாரிய செல்வாக்குச் செலுத்தும் என்பதனை பெற்றோர்களே மாணவர்களே அறிந்திருப்பதில்லை. எனவே தான் இப்படியானதொரு கருத்தரங்கினை மாணவர்களுக்கும் பொற்றொர்களுக்கும் நடாத்த வேண்டுமென எமது கல்விப் பிரிவு முடிவு செய்துள்ளதுடன் பங்கு பற்றுகின்ற மாணவர்களுக்கு பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும்' என பிரதேச செயலக உளவள ஆலோசகரும் இச் செயற்றிட்டத்தின் இணைப்பாளருமாகிய மனூஸ் அபூபக்கர் தெரிவித்தார். 


No comments

Powered by Blogger.