Header Ads



இலங்கையில் Jaffna Muslim இணையம் முதலிடம்


உலகளாவிய ரீதியில், இணையங்களை தரப்படுத்தும் அலஸ்கா இணையத்தள தரவுகளின்படி, இலங்கை முஸ்லிம் சார்பு இணையங்களின் வரிசையில், இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையம் முதலிடம் பிடித்துள்ளது (அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாவுக்கே)

04.04.2016 அன்றைய நிலவரமே இது. இத்தரவுகள் அடிக்கடி மாற்றமடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படியிருந்தபோதிலும்..

மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஜப்னா முஸ்லிம் இணையம் இலங்கையில் ஒரு வருடமாக தடை செய்யப்பட்டிருந்தது. இதையொத்த  முகவரிகளில் சிலர் போலி பேஸ்புக் பக்கங்களை உருவாக்கினர். இட்டுக்கட்டப்பட்ட கதைகள், பொறாமை பிடித்தவர்களின் வஞ்சக சூழ்ச்சிகள், நாகரீகமற்ற + ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், அவமதிப்புக்கள், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல விடயங்களை கடந்தே ஜப்னா முஸ்லிம் இணையம் இந்நிலையை எட்டியுள்ளது.

இவ்வேளையில் எமது பயணத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய சகலருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன், அல்லாஹ்வின் உதவியுடன் எதிர்காலத்திலும் தொடர்ந்து பயணிக்க உறுதிபூண்டுள்ளோம்.

தொழில்சார் ஊடகக் கல்வி, பத்திரிகைத்துறை அனுபவமூடாகவும் இயக்கப்படும் ஜப்னா முஸ்லிம் இணையத்தை, உங்கள் பிரார்த்தனைகளிலும் இணைத்துக் கொள்ளுங்கள் நன்றி...!!!




14 comments:

  1. Masha Allah, Allah ungalukku ungal patthirikaikkum Arul puriwanaka.

    ReplyDelete
  2. தொடர்ந்து பக்கசார்பற்ற செய்திகளை வழங்கும் என்று நம்புகிறோம் அதற்கு அல்லாஹ்விடமும் பிரார்திகிறேன்.

    ReplyDelete
  3. இலங்கை முஸ்லிம் சார்பு இணையங்களின் வரிசையில், இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையம் முதலிடம் பிடித்துள்ளமை குறித்து மட்டற்ற மகிழ்ச்சி!அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இனையத்தள ஆசிரியர் அன்சிருக்கு எனது நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்!

    இருந்தாலும் ஒரு சின்ன வேண்டுகோள்..!

    தயவுசெய்து தரமான, உண்மை உறுதிப்படுத்தப்பட்ட, ஆதாரமான (அதிலும் குறிப்பாக இஸ்லாம் சம்பந்தப்பட்ட விடயங்களில்) செய்திகளை மாத்திரம் பிரசுரியுங்கள். அத்தோடு.. மற்றவர்களின் செய்திகளின் தலைப்புக்களை ஆக்கத்தின் விடயத்திட்கேட்ப பொருத்தமானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  5. இன்னும் மேலும் மேலும் வளரச்சியடைய
    அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவனாக வாழ்த்துக்களை தெரிவித்துக் காெ்ள்கின்றேன்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வளரட்டும் இஸ்லாமிய வரம்புக்குள்.

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ் வாழ்த்துவோம்

    ReplyDelete
  8. Congratulations! Please make sure the "Suitable Heading" for the Article.

    ReplyDelete

Powered by Blogger.