Header Ads



லக்கல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிகள் திருட்டு, CID விசாரணையில் புதிய தகவல்கள் அம்பலம்

லக்கல பொலிஸ் நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி திருட்டு சம்பவம் அந்த பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்துடன் சட்டவிரோத இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் அரசியல் தொடர்புடைய கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அதற்கமைய துப்பாக்கிகளை திருடிய சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சட்டவிரோத இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபடும் அரசியலுடன் தொடர்புடைய கடத்தல்காரர்கள், லக்கல பொலிஸ் நிலையத்தில் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு கடந்த காலங்களில் இலஞ்சமாக பெருந்தொகை பணம் வழங்கியுள்ளனர்.

தற்போதைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சேவைக்கு வந்த பின்னர் பணம் வழங்குவதனை இடை நிறுத்தியதன் காரணமாக அவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்கு திட்டமிட்டே துப்பாக்கிகளை திருடியதாக புலனாய்வு பிரிவு, தங்கள் பிரதானிகளுக்கு அறிவித்துள்ளனர்.

கடத்தல்காரர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டிருப்பது தன்னிடம் சிக்கினால் பொலிஸ் பதவியில் இருந்து துரத்திவிடுவதாக புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்ததோடு அவ்வாறு பணம் பெற்றுகொள்ளும் அதிகாரிகள் யார் என்பது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த கடத்தல்காரர்கள் சிக்கலுக்குள் சிக்கியுள்ளதாகவும் பொலிஸ் பாதுகாப்பு இழக்கப்படும் நிலையில் அவர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கி திருட்டு தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளில் பொலிஸ் அதிகாரினால் வழங்கப்படுகின்ற சாட்சிகளில் முரண்பாடுகள் காணப்படுவதாக நம்ப முடியாத வகையில் உள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.