Header Ads



தேசியத் தலைமை எனும் மாயைக்குள், சிக்கித்தவிக்கும் முஸ்லிம் சமூகம்


-Safwan Basheer-

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை இலங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என்று ஒரு கூட்டமும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களை தேசியத் தலைவர் என்று இன்னுமொரு கூட்டமும் சாெல்லிக் கொண்டு இருக்கிறது.

இந்த "தேசியம்","தலைமை" "முஸ்லிம் சமூகம்" இதெல்லாமே இவர்கள் தமது அதிகாரத்தை பரவலாக்கிக் கொள்வதற்கு மக்கள் மத்தியில்  ஏற்படுத்தியிருக்கும் மாயைகள்.

இவர்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படும் எந்தத் தேசியப் பிரச்சினைக்கும் ஒரு  நிரந்தரத் தீர்வுக்கு வழிகாட்டியதில்லை. எமது ஒட்டு மொத்த சமூகத்துக்கும் ஒரு பிரச்சினைவரும்போது இவர்களது தீர்வுகள் அனைத்தும் அறிக்கைகளோடு நின்றுவிடும். 

நாட்டில் நல்லாட்சி நிலவினாலும் சிரி கெட்டாட்ச்சி நிலவினாலும் சரி எமது தேசியத் தலைவர்கள் அதிகாரமுள்ளவர்களாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள்.

பணிப் பெண்களாக வெளிநாடு செல்வது தொடக்கம் எமது பாடாசாலைகளில் இருக்கும்  ஆசிரியர் பற்றாக்குறைவரை  எமது முழு சமூகம் எதிர் நோக்கும் ஆயிரம் பிரச்சினைகள் பிச்சைக் காரனின் புன்போல இருந்து கொண்டேதான் இருக்கி்ன்றன.

ஆனால் நமது தேசியத் தலைவர்களின் பிரச்சைனைகள் வித்தியாசமானது,

தேசியப்பட்டியலை யாருக்கு  கொடுப்பது, மாகண அமைச்சுப்பதவிகளை யார் யாருக்கு எத்தனை வருடத்துக்கு பிரித்துக் கொடுப்பது. யாருடன் விவாதம் செய்வது, எந்தத் தொலைக் காட்சியில் விவாதம் செய்வது. இந்த மாதிரி சில்லரைப் பிரச்சினைகளும் அவற்றுக்கான  சமாளிப்புக்களோடுமே இவர்களது அமைச்சுக்காலம் முடிவடைந்துவிடும் போல் தெரிகிறது.

கடந்த அரசில் இனவாதம் முத்திக் கிடந்த போதும் இவர்கள் ஒன்றும் செய்யவில்லை தமிழில் அறிக்கை விட்டதைத் தவிர. இந்த ஆட்சியிலும் ஒரு இனவாத  அலையை உருவாக்குவதற்கான பாரிய எத்தனிப்பொன்று நடந்து கொண்டிருப்பது போன்ற  சமிக்ஞைகள் தென்படுகின்றன.

இவர்கள் உண்மையில் இலங்கை  முஸ்லிம்களின் தேசியத் தலைவர்களாக இருந்தால், நாட்டில் எமது சமூக்த்துக்கு  எதிராக ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக களத்தில் இறங்கி தமது பதவிகளைப் பனயம் வைத்து  தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் கரையோர மாவட்டத்த பெற்றுக்கொடுத்து,  வில்பத்துல மீள்குடியேற்றி  முடியகுல துனியா முடிஞ்சிரும்

8 comments:

  1. there is not a write persons to hold that title. We need to be pation and turned to Allah

    ReplyDelete
  2. Country's president is the Theysiyath Thalaywar for everyone. These people are party leaders and nothing else even if they show miracles.

    ReplyDelete
  3. It is not a matter whether one should be named or designated or appointed as a national leader. Every leader should work and do their duty towards the community.During that process the community will recognize and respect him as a leader. Leadership must be earned, not conferred upon.

    ReplyDelete
  4. இலங்கை முஸ்லிம்களுக்கு கல்வி ,காணி ,மீள் குடியேற்றம் ,துறை சார்ந்த அறிஞர்களை உருவாக்குதல் , மேலும் நவீன வர்த்தக முயற்சிகள் ,நவீன மீன் பிடி முயற்சிகள் போன்றவற்றில் ஒரு திட்ட வரைவை முஸ்லிம் புத்திஜீவிகள் உருவாக்கி அவற்றை எமது அரசியல்வாதிகளிடம் கொடுத்து செயற்படுத்துமாறு கோரவேண்டும் .அப்படி செயட்படுத்தாவிட்டால் அகில இலங்கை ரீதியாக அனைத்து முஸ்லிம்களும் இதனை அமுல்படுத்த முயற்சி எடுக்காத முஸ்லிம் தலைவர்களை புறக்கணிக்க வேண்டும் .ஏனெனில் இந்த விடயங்களை செய்ய முடியாத அரசியலால் ஒரு சமூகத்துக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை .

    ReplyDelete
  5. தலைப்புகளை சிந்தனையுடன் எழுதுங்கள். முஸ்லிம் சமூகம் இந்த இரண்டு அரசியல்வாதிகளிடமும் பெரிதாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. சமூகத்தின் எதிர்காலத்தையும் அதன் இளைய தலைமுறையின் வளமான எதிர்காலத்துக்குமான எந்த உருப்படியாக திட்டங்களும் மற்றவர்களைப் போலவே இந்த இருவரிடத்திலும் இல்லை. ஆனால் தங்கள் அரசியல் பொருளாதார இலாபங்களுக்கு மிகச் சரியான முறையில் சமூகத்தின் பெயரையும் அதன் இடத்தையும் பயன்படுத்தி சுயலாபம் ஈட்டத்தெரிந்த இரு தந்திரவாதிகள் என்பதை முஸ்லிம் சமூகம் மிகத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றது.சமூகத்தின் மற்றொரு தோல்வியில் இது மிகவும் பாரதூரமானது. ஹஸ்புனல்லாஹூ வனிஅமல் வகீல்.

    ReplyDelete
  6. Mr.Saffan Baheer, before you write this message against two leaders, think before you complaining because they have done an important role in our community and continuously doing the same role until now, please try to organize all Muslim leaders and politicians in different group under one roof for unification. Then we sort out our problem we are facing right now in Sri-lanka.

    Hameed.A.Cader
    Ex Local Government Member - Akurana

    ReplyDelete
  7. முதலில் இந்த பதிவை பிரசுரித்த Jaffna Muslim இக்கு எமது நன்றிகள். Safwan Basheer அவர்களின் துணிவுக்கும் சமூகத்தில் குருட்டுத்தனமாக சுயநலத்துக்காக ஆதரவளிக்கும் ஆதரவாளர்களின் கண்களை விளிபடைய செய்தமைக்கு எமது நன்றிகளும் பாராட்டுகளும். Jaffna Muslim வாசகர்கள் எவ்வளவு கருத்தாழ்மை உள்ளவர்கள் எப்படியான கோணங்களில் சிந்திக்கிறார்கள் என்பதை மேல் உள்ள பதிவுகளில் இருந்து உணர முடிகிறது. இதற்கு களம் அமைத்து கொடுத்த Jaffna Muslim இக்கு மீண்டும் எமது நன்றிகள்.

    Hameed A. Cadar, Could you tell us, what is the important role that these two party leaders done for our society. But we knows, enjoys ministries and other facilities. Support for 18th, Casino, Divineguma act...etc amendments. Halal problems, BBS problems, Aluthgama...etc. ?????....!!!!!. Leader must be only one, not many.

    ReplyDelete
  8. முதலில் இந்த பதிவை பிரசுரித்த Jaffna Muslim இக்கு எமது நன்றிகள். Safwan Basheer அவர்களின் துணிவுக்கும் சமூகத்தில் குருட்டுத்தனமாக சுயநலத்துக்காக ஆதரவளிக்கும் ஆதரவாளர்களின் கண்களை விளிபடைய செய்தமைக்கு எமது நன்றிகளும் பாராட்டுகளும். Jaffna Muslim வாசகர்கள் எவ்வளவு கருத்தாழ்மை உள்ளவர்கள் எப்படியான கோணங்களில் சிந்திக்கிறார்கள் என்பதை மேல் உள்ள பதிவுகளில் இருந்து உணர முடிகிறது. இதற்கு களம் அமைத்து கொடுத்த Jaffna Muslim இக்கு மீண்டும் எமது நன்றிகள்.

    Hameed A. Cadar, Could you tell us, what is the important role that these two party leaders done for our society. But we knows, enjoys ministries and other facilities. Support for 18th, Casino, Divineguma act...etc amendments. Halal problems, BBS problems, Aluthgama...etc. ?????....!!!!!. Leader must be only one, not many.

    ReplyDelete

Powered by Blogger.