மஞ்சள் கடைவையில் பாதை மாறிய வயோதிபர், வைத்திய நிபுணரின் காரில் மோதுண்டு பலி
(எம்.இஸட்.ஷாஜஹான்)
மஞ்சள் கடைவையில் பாதை மாறிக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் விசேட வைத்திய நிபுணர் ஒருவரின் காரில் மோதுண்டு பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் சனிக்கிழமை (2-4-2016) அதிகாலை 5.45 மணியளவில்; கட்டநாயக்கா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கடடநாயக்க ஜுப்பிலி மாவத்தை பகுதியைச் சேர்ந்த வர்ணகல சூரிய சைமன் நெயெல் பெரேரா (80 வயது) என்பவரே இந்த விபத்துச் சம்பவத்தில் பலியானவராவார்.
சம்பவத்தில் பலியான வயோதிபர் தனது மகளின் வீட்டுக்குச் செல்வதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கட்டுநாயக்கா பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்கொழும்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள மஞ்சள் கடைவை வழியாக பாதை மாறும் போது, கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி சென்றுக் கொண்டிருந்த விசேட வைத்திய நிபுணரின் காரில் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் அங்கு மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்;.
சம்பவத்தை அடுத்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைச் செலுத்திய வைத்தியர் கைது செய்யப்படடு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, சந்தேக நபரை எதிர் வரும் திங்கட்கிழைமை (4-4-2016) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழம்பு பிரதான மஜிஸ்ட்ரேட் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment