முஸ்லிம் மதத்தலைவர்களும், அரசியல்வாதிகளும் எம்முடன் ஒன்றுபடவேண்டும் - பொது பலசேனா
இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அழித்து முஸ்லிம்களுக்கும் பெளத்தர்களுக்குமிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பொதுபலசேனா அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதற்காக இஸ்லாமிய மதத்தலைவர்களுடனும், முஸ்லிம் அரசியல் தலைவர்களுடனும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயாராகவுள்ளது.
இந்த நல்ல காரியத்துக்காக அவர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கிறது என பொதுபலசேனாவின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று மதியம் கிருலப்பனையிலுள்ள பெளத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார். அவர் தொடர்ந்தும் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில்,
பொதுபலசேனா இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதத்தை அழித்து பெரும்பான்மை மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நிலவும் முரண்பாடுகளை இல்லாமற் செய்வதற்கு முயற்சித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் எம்மீது இனவாத சாயமே பூசப்பட்டது.
அளுத்கமயில் இடம்பெற்ற வன்செயல்களுக்கும் பொதுபலசேனாவுக்கும் எவ்வித தொடர்புமில்லை. அளுத்கம சம்பவத்துக்கு சம்பிரதாய முஸ்லிம்கள் காரணமல்ல. அடிப்படைவாத முஸ்லிம்களே இதன் பின்னணியில் செயற்பட்டனர். அளுத்கம சம்பவம் ஐ.எஸ். அமைப்பின் திட்டமிட்ட செயலாகும்.
இது தொடர்பாக பகிரங்க விசாரணை நடாத்துமாறு கூறினோம். சுதந்திர ஆணைக்குழு நியமிக்கும்படி கூறினோம். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.
கடந்த கால அரசாங்கமும் எமது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த அரசாங்கமும் அது தொடர்பில் மெளனம் சாதிக்கிறது.
எமது போராட்டங்கள் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கே எதிரானவையாகும். இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதத்தை ஒழித்த முஸ்லிம் மற்றும் பெளத்தர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதில் பொதுபலசேனா அமைப்பு உறுதியாக உள்ளது. இதற்காக முஸ்லிம் மதத்தலைவர்களும் அரசியல்வாதிகளும் எம்முடன் ஒன்றுபடவேண்டும்.
பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அதற்கான திட்டங்கள் வகுக்க வேண்டும். இதற்காக நாம் தயாராகவே இருக்கிறோம்.
தங்கள் மீது உள்ள இனவாதிகள் என்ற குற்றச்சாட்டை மறைபதட்கான விடயமே தவிர இது ஒரு இதய சுத்தியான விடயமல்ல என்பதுதான் எமது அனுமானம் இருந்தாலும் இவர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான உண்மையான விளக்கத்தை அளிப்பது முஸ்லிம்கள் ஆகிய நமது கடைமையாகும்.
ReplyDeleteதங்கள் மீது உள்ள இனவாதிகள் என்ற குற்றச்சாட்டை மறைபதட்கான விடயமே தவிர இது ஒரு இதய சுத்தியான விடயமல்ல என்பதுதான் எமது அனுமானம் இருந்தாலும் இவர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான உண்மையான விளக்கத்தை அளிப்பது முஸ்லிம்கள் ஆகிய நமது கடைமையாகும்.
ReplyDeletePlease dont agreed .bbs rrying to IDENTIFY OUR ULAMAS AND EDUCATED PEOLES.THEY ARE VERY CLEVER.LAST TIME FORMER PRESIDENT WAS CALLED MALIGAWATTE PEOPLE TO IFTHAR INVITATION.AFTER RHAT IFTAR HE MURDERED OUR MUSLIMS.LIKE WISE WILL HAPPEND IN THE FUTURE.
ReplyDeletethis is pothupalasena making new daarama but we are not agree with them.
ReplyDelete