தஃவாப் பணியாளர்களுக்கான சில வழிகாட்டல்களும், ஆலோசனைகளும்
இஸ்லாம் இனிமையான மார்க்கமாகும். அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கமாகும். அதன் போதனைகள் அனைவரையும் கவரக்கூடியவை. அது மென்மை, விட்டுக்கொடுப்பு, தயாள குணம், சகிப்புத்தன்மை, இங்கிதம் முதலான அருங் குணங்களை போதிக்கும் மார்க்கமாகும். மாற்றுக்; கருத்துடையோரோடு மாத்திரமன்றி, முஸ்லிம் அல்லாதவர்களுடனும் நளினமாகவும் பண்பாடாகவும் நடந்து கொள்ளுமாறும் விவேகத்துடன் அழகிய உபதேசத்தைக் கொண்டு அழைக்குமாறும் கட்டளையிடுகின்ற மார்க்கம் இஸ்லாம் ஆகும்.
மென்மையாகவும் நளினமாகவும் உபதேசம் புரியுமாறும் அழைப்பு விடுக்குமாறும் வழிகாட்டும் இஸ்லாம், எல்லா விடயங்களிலும் மென்மையையும்; நளினமான போக்கையும் விலியுறுத்துகிறது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். 'அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான மார்க்கம் அசத்தியத்தை விட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கின்ற இலகுவான மார்க்கமாகும்.' (முஸ்னத் அஹ்மத் : 5ஃ266)
மற்றொரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
'நிச்சயமாக இஸ்லாம் எளிதானது. இம்மார்க்கத்தை யார் (தன் மீது) சிரமமானதாக ஆக்கிக் கொள்கின்றாரோ அது அவரை மிகைத்துவிடும்.' (ஸஹீஹுல் புகாரி- ஹதீஸ் எண்: 39)
எனவே, நாம் எமது சகல நடவடிக்கைகளிலும் குறிப்பாக குத்பாப் பிரசங்கங்கள், உரைகள் முதலான தஃவாப் பணிகளின் போதும் நளினமான போக்கை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். நளினம், அல்லாஹ் விரும்பும் ஒரு நற்குணமாகும்.
ஒரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களைப் பார்த்து,
' إن الله يحب الرفق في الأمركله '
'ஆயிஷா! நிச்சயமாக எல்லா விடயங்களிலும் மென்மையாக நடந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகின்றான்' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி- ஹதீஸ் எண்: 6024)
தானே இரட்சகன் என்று வாதாடிய பிர்அவ்னிடம் சென்று மென்மையாக பேசுமாறு நபி மூஸா, நபி ஹாரூன் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகிய இருவருக்கும் அல்லாஹ் கட்டளையிட்டான். அது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
;' فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا '
'நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையாக பேசுங்கள்;.' (ஸுரா தாஹா: 44)
நபிமார்கள் தங்களது தஃவா களங்களில் மிக மோசமான எதிர்ப்புகளை சந்தித்தபோதும் மிகவும் பண்பாடாக, நளினமாக நடந்து கொண்டார்கள். அதற்கு பின்வரும் நிகழ்வு சிறந்த சான்றாகும்:
இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை நோக்கி அவரது தந்தை, 'நீர் இந்தப் பணியிலிருந்து விலகிக் கொள்ளாவிடின் உம்மைக் கல்லால் எறிந்து கொன்று விடுவேன். இனி நீர் என்னை விட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடு' என்று எச்சரிக்கை விடுத்தபோது இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்,
' قال سلام عليك سأستغفرلك ربي إنه كان بي حفيا '
'உங்கள் மீது சாந்தி உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழைபொறுக்கத் தேடுவேன்;. நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்' (ஸுரா மர்யம்;: 47) என்று பதிலளித்ததை அல்குர்ஆன் பதிந்து வைத்திருக்கிறது.
அவ்வாறே நபி நூஹ், நபி ஹூத், நபி ஸாலிஹ் மற்றும் நபி ஷுஐப் (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோர் தமது சமூகத்தவர்களிடம் தஃவாப் பணிகளை மேற்கொண்டபோது எந்தளவு தூரம் மென்மையாகவும் நளினமாகவும் நடந்து கொண்டார்கள் என்பதை ஸூரதுல் அஃராப் விரிவாக விளக்குகிறது.
முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், தம்மை எதிர்த்த முஷ்ரிக்குகள், நயவஞ்சகர்களுடன் எவ்வளவு விட்டுக்கொடுப்புடனும் நளினமாகவும் இதமாகவும் நடந்துள்ளார்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் ஹதீஸ் கிரந்தங்களில் பரவிக் கிடக்கின்றன.
இஸ்லாமிய அழைப்புப் பணியின் அடிப்படை ஹிக்மாحكمة எனும் விவேகமும் அழகிய உபதேசமுமாகும். அல்-குர்ஆன் அது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது:
' ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة '
'(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!' (ஸுரா அந்நஹ்ல்: 125)
தஃவா களத்தில் பணியாற்றுகின்றபோது சிலவேளை விவாதிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் மிகவும் அழகிய முறையில் அதை மேற்கொள்ளுமாறு அல்குர்ஆன் எமக்கு வழிகாட்டுகிறது.
'وجادلهم بالتي هي أحسن '
'இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக!' (ஸுரா அந்-நஹ்ல்: 125)
தஃவா களத்தில் பணியாற்றுகின்ற போது மென்மையையும் நளினப் போக்கையும் இழந்து விட்டால் சிலவேளை எமக்கு நெருக்கமானவர்களைக் கூட நாம் இழக்க வேண்டி ஏற்படும். நபியவர்களுக்கு அல்லாஹு தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.
'அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொண்டீர்;;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;.' (ஸுரா ஆலு இம்ரான்: 159)
நளினம் இழக்கப்படும்போது நன்மைகள் அனைத்தையும் இழக்க வேண்டி நேரிடும். பின்வரும் நபிமொழி இதற்கு நல்ல சான்றாகும்:
عن جريرعن النبي صلى الله عليه وسلم قال من يحرم الرفق يحرم الخير (مسلم : 2592)
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்லல்;லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் : 2592)
'மென்மையை இழந்தவர் நன்மைகள் அனைத்தையும் இழந்தவர் ஆவார்.' (முஸ்லிம்)
எனவே, உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். அவர்கள்; தமது தஃவா நடவடிக்கைகளில் குறிப்பாக, குத்பாப் பிரசங்கங்களில் நபிமார்களின் தஃவா அணுகுமுறையையே கையாண்டு மக்களை அணுக வேண்டும்.
இஸ்லாத்துக்கு எதிரான தீய சக்திகள், பிழையான கொள்கையுடையோர் பற்றி குத்பாப் பிரசங்கங்கள் மற்றும் சொற்பொழிவுகளில் மக்களுக்கு தெளிவுபடுத்தும்போது இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைப்
பேணி சிறந்த வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், நாவைப் பேணி நல்ல வார்த்தையைக் கூறுவதே உண்மையான பிரசாரகரின் பண்பாகும்.
சமூக ஊடகங்களில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பிறர் முன்வைக்கும்போது நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் இஸ்லாமிய வரையறைகளைப் பேணியவாறும் அவர்களுக்கு தெளிவுகளை வழங்க வேண்டும். மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் மாற்று மதங்களை அகௌரவப்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதை விட்டும் கண்டிப்பாகத் தவிரந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தின் எதிரிகள் ஏதேனும் சிரமங்களில் சிக்கிக் கொள்கின்றபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடாது. மாறாக அனைத்து மக்களுக்கும் நேர்வழி கிடைக்க பிரார்த்திக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனைகளில் ஒன்றாகும். இது குறித்து மக்களுக்கு அறிவூட்டுவது அவசியமாகும்.
தவிரவும் சாதாரண பொது மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையான மொழிநடையில் சுருக்கமாக குத்பாக்களை நிகழ்த்த வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
عن أنس – رضي الله عنه - قال: قال رسول الله – صلى الله عليه وسلم -: (يسِّرواولاتعسِّروا،وبشِّرواولاتنفِّروا) متفق عليه.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்;லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்ததாக அனஸ் பின் மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். '(மக்களிடம்) நளினமாhக நடந்து கொள்ளுங்கள்;. (அவர்களைச்) சிரமப்படுத்தி விடாதீர்கள்;. நன்மாராயம் கூறுங்கள் (எச்சரிக்கும் போதுகூட) வெறுப்பூட்டி விடாதீர்கள்.' (புகாரி, முஸ்லிம்)

இவ்வகையில் எமது தஃவா நடவடிக்கைகள் அமையுமாக இருந்தால் நிச்சயமாக அது பயன்மிக்கதாக அமையும். அத்தோடு பின்வரும் விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
1. எமது பிரசாரம் அல்லது விளக்கம் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு மேற்கொள்ளுதல்.
2. பிழையான கருத்துடையோர் தமது பிழைகளிலிருந்து மீள வேண்டும் என்ற அவாவோடு பிரார்த்தனை செய்தல்.
3. அத்தகையவர்களோடு எப்போதும் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுதல்.
4. தவறுகளைத் திருத்துவதே நோக்கமன்றி தவறிழைப்போரை குத்திக் காட்டுவதோ கடுமையான வார்த்தைகள் மூலம் கண்டிப்பதோ நோக்கமாக இருக்கக் கூடாது.
எனவே, எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் சத்தியத்தை விளங்கி அதன்படி நடக்கவும் அதன் வழியில் மென்மை, நளினம் என்பவற்றை கடைப்பிடிக்கவும் அருள் புரிவானாக!
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
தற்போது தஃவா களத்தில் இருக்கின்றவர்களிடத்தில் இயக்க வெறியே உள்ளது. இஸ்லாமிய வெறியயைக் காணவில்லை. அதனால்தான் இவ்வளவு பிரச்சினைகள். தரமான ஆக்கம். நன்றிகள்.
ReplyDeleteவேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில்1 கடுமையான வேதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.(
ReplyDeleteAl Quran 2:85)
காலம் பிந்திய உபதேசமாக இருந்தாலும் பின் பற்றினால் நல்லது.உலமாக்கள் ரசூளுல்லாஹ்வின் வாரிசு சொத்து என்றால் உலமாக்களும் அதன் உண்மை தன்மையை விளங்கி நடந்தால் நல்லது.
ReplyDeleteMassalla very good article with the deep illustration to the points.
ReplyDeleteBut I have some suggestions too.
1. Who do we called ulama? When a person pass out from a Arabic institute we call him he is a ullama. Is it correct?
2. Ullama must have a depth knoldge in the topic he going to address. Because now a days people have knoldge with all madhab. So when we address a subject need to learn the our great grate ulamas wisdom on particular subject.
3. Again regular seminars to the ulamas very important.
4. ACJU can guide and give regular seminar to our ulamas
5. Regular visit by ACJU to all masjith in Sri Lanka
6. Give them advice to the trustees and the general public about the current situation and how to face it
7. We need to work as Muslim not as different different group?
This is my opinion if is wrong forgive me
Jazakallah
This advice is good for Salafi bros who made a dawa field as a filed of battles. They confused people and they made mess of hell
ReplyDeleteIn dawa. Do not they know all this and yet they behave badly
7:165. (கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். குற்றம் புரிந்து வந்ததால் அநீதி இழைத்தவர்களைக் கடுமையாகத் தண்டித்தோம்)
ReplyDeleteமுந்தைய சமுதாயத்தில் தீமையைச் செய்தவர்கள், தீமையைத் தடுத்தவர்கள், தீமையைத் தடுக்காதவர்கள் ஆகிய மூன்று வகையினர் இருந்தனர். அவர்களில் தீமையைத் தடுத்தவர்களை மட்டும் அல்லாஹ் காப்பாற்றியதாக இவ்வசனம் (7:165) கூறுகிறது.
தீமையைச் செய்யாமலும், மற்றவர்களின் தீமையைத் தடுக்காமலும் இருந்தவர்கள் தீமை செய்தோருடன் சேர்த்து அழிக்கப்பட்டனர் என்றும் இவ்வசனம் கூறுகிறது.
தீமையைத் தடுக்காமல் தம்மளவில் நல்லவர்களாக வாழ்வோர் இறைவனின் திருப்தியைப் பெற முடியாது என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.
மத்ஹபுகளை பின்பற்றாதீர்கள்; குர் ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுங்கள்:
ReplyDelete- இமாம் ஷாஃபியின் கூற்று!
وقد قال الشافعي إذا صح الحديث فهو مذهبي (المجموع - (1 / 92)
இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள் : ஹதீஸ் ஸஹீஹாக இருக்குமென்றால் அதுவே என்னுடைய மத்ஹபாகும்.
(அல்மஜ்மூ பாகம் :1 பக்கம் : 92)
الشافعي يقول مثل الذي يطلب العلم بلا حجة كمثل حاطب ليل يحمل حزمة حطب وفيه أفعى تلدغه وهو لا يدري ( المدخل إلى السنن الكبرى ج: 1 ص: 211)
இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள். ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனின் உதாரணம் இரவில் விறகு சுமப்பவனின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் ஒரு கட்டு விறகைச் சுமக்கின்றான். அதில் ஒரு கடும் விஷப்பாம்பு இருக்கிறது. அவன் அறியாத நேரத்தில் அவனைத் தீண்டிவிடும். (இது போன்றுதான் ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனை அக்கல்வி அவன் அறியாத விதத்தில் அவனை வழிதவறச் செய்துவிடும்)
(மத்ஹல் பாகம் : 1 பக்கம் : 211)
மேலும் இமாம் ஷாஃபி அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களை மட்டும்தான் ஆதாரமாகக் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.
عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قلنا هذا مأخوذ مأخوذ حتى قدم علينا الشافعي فقال ما هذا إذا صح الحديث عن رسول الله صلى الله عليه وسلم فهو مأخوذ به لا يترك لقول غيره قال فنبهنا لشيء لم نعرفه يعني نبهنا لهذا ((مختصر المؤمل ج: 1 ص: 59)
ஷாஃபி இமாம் அவர்கள் எங்களிடம் வருகை தருகின்ற வரை நாங்கள் நபியவர்கள் சொன்னதாக எங்களுக்கு கூறப்படுமென்றால் ''இது எடுத்துக் கொள்ளப்படவேண்டியது'' ''இது எடுத்துக் கொள்ளப்படவேண்டியது'' என்று கூறுவோம். ஷாஃபி அவர்கள் '' என்ன இது? நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஹதீஸ் ஸஹீஹாக இருக்குமென்றால் அதுதான் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். எவருடைய சொல்லிற்காகவும் அது விடப்படக் கூடாது'' என்று கூறினார்கள். நாங்கள் அறியாத ஒன்றை எங்களுக்கு உணர்த்தினார்கள்.
(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 59)
وفي رواية روى حديثا فقال له قائل أتأخذ به فقال له أتراني مشركا أو ترى في وسطي زنارا أو تراني خارجا من كنيسة نعم آخذ به آخذ به آخذ به وذلك الفرض على كل مسلم (مختصر المؤمل ج: 1 ص: 58)
ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபி அவர்களிடம் நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம் அவர்கள் '' நீ என்னை இணைவைப்பாளன் என்று நினைக்கிறாயா? அல்லது என்னுடைய இடுப்பில் (நெருப்பு வணங்கிகளுக்குரிய) இடுப்பு வாரைப் பார்க்கிறாயா? அல்லது தேவாலாயத்திலிருந்து வெளியேறிய (கிறிஸ்தவன்) என்று நினைக்கிறாயா? ஆம். நான் அதை பற்றிப் பிடிப்பேன். அதைப் பற்றிப் பிடிப்பேன். அதைப் பற்றிப் பிடிப்பேன். இது அனைத்து முஸ்லிம்களின் மீதும் கட்டாயக் கடமையாகும் என்று கூறினார்கள்.
ReplyDeleteوسمعت الشافعي يقول ما من أحد إلا وتذهب عليه سنة لرسول الله ( صلى الله عليه وسلم ) وتعزب عنه فمهما قلت من قول أو أصلت من أصل فيه عن رسول الله ( صلى الله عليه وسلم ) خلاف ما قلت فالقول ما قال رسول الله ( صلى الله عليه وسلم ) وهو قولي قال وجعل يردد هذا الكلام ( تاريخ دمشق - (51 / 389)
இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள் : நபியவர்கள் வழிமுறை கிடைக்கும் போது அதைவிட்டும் தூரமாகுபவர் யாரும் இல்லை. நான் நபியவர்களின் கூற்றுக்கு மாற்றமாக ஏதாவது ஒரு கருத்தைக் கூறினால் அல்லது ஏதாவது ஒரு அடிப்படையை அமைத்தால் நபியவர்கள் கூறியதுதான் சட்டமாகும். அதுதான் என்னுடைய கருத்துமாகும். இதனை அவர்கள் திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருந்தார்கள்.
(தாரீஹ் திமிஷ்க் பாகம் : 51 பக்கம் : 389)
سمعت الشافعي يقول كل حديث عن النبي ( صلى الله عليه وسلم ) فهو قولي وإن لم تسمعوه مني (تاريخ دمشق - (51 / 389)
நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஒவ்வொரு ஹதீஸும் அதுதான் என்னுடைய கருத்தாகும். அதை நீங்கள் என்னிடமிருந்து செவியேற்காவிட்டாலும் சரியே
(தாரீஹ் திமிஷ்க் பாகம் : 51 பக்கம் : 389)
قال البويطي سمعت الشافعي يقول لقد ألفت هذه الكتب ولم آل جهدا ولا بد أن يوجد فيها الخطأ لأن الله تعالى يقول وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا فما وجدتم في كتبي هذه مما يخالف الكتاب والسنة فقد رجعت عنه (مختصر المؤمل ج: 1 ص: 60)
ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள் '' நான் இந்த புத்தகங்களை தொகுத்துள்ளேன். நான் ஆய்வு செய்வதில் குறைவைக்கவில்லை. என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் பெற்றுக் கொள்ளப்படும். ஏனென்றால் அல்லாஹ் அல்லாதவர்களிமிருந்து வருமென்றால் அதிலே அவர்கள் அதிகமான முரண்பாடுகளை பெற்றிருப்பார்கள் '' என்று தன் திருமறையில் கூறுகிறான். என்னுடைய இந்த புத்தகங்களிலே திருமறைக்குஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால் நிச்சயமாக நான் அதை விட்டும் திரும்பிவிட்டேன். (அதாவது என்னுடைய கருத்து தவறானது. நபிவழிதான் சரியானது என்பதாகும்).
(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 60)
وقال الشافعي: أجمع الناس على أن من استبانت له سنة عن رسول الله صلى الله عليه وسلم لم يكن له أن يدعها لقول أحد من الناس (إعلام الموقعين عن رب العالمين - (2 / 325)
யாருக்கு நபியவர்களின் சுன்னத் தெளிவாகிறதோ அவர் மக்களில் யாருடைய சொல்லிற்காகவும் அதனை விடுவது அவருக்கு தகுதியானதில்லை என்ற கருத்தில் மக்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.
(இஃலாமுல் முவக்கிஈன் பாகம் : 2 பக்கம் : 325)
قال لنا الشافعي أنتم أعلم بالحديث والرجال مني فإذا كان الحديث الصحيح فأعلموني إن شاء يكون كوفيا أو بصريا أو شاميا حتى أذهب إليه إذا كان صحيحا (المدخل إلى السنن الكبرى - (1 / 172)
இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள் : ஹதீஸைப் பற்றியும் அறிவிப்பாளர்களைப் பற்றியும் என்னை விட நீங்கள்தான் அறிந்தவர்கள். ஒரு ஸஹீஹான ஹதீஸை கூஃபா வாசி, பஸராவாசி, ஷாம்வாசி யாரிடமிருந்து எனக்கு நீங்கள் அறியச்செய்தாலும் அது ஸஹீஹாக இருக்குமென்றால் நான் அதன் பக்கம் சென்றுவிடுவேன்.
(அல்மத்ஹல் பாகம் : 1 பக்கம் : 172)
سمعت الشافعي يقول: "كل مسألة تكلمت فيها صح الخبر فيها عن النبي صلى الله عليه وسلم عند أهل النقل بخلاف ما قلت فأنا راجع عنها في حياتي وبعد موتي (إعلام الموقعين عن رب العالمين - (2 / 328)
".என்னுடைய வாழ்நாளிலும் என்னுடைய மரணத்திற்குப் பிறகும் எந்த ஒரு மார்க்கச்சட்டதிலும் நான்கூறியதற்கு மாற்றமாக ஹதீஸ்கலை வல்லுநர்களிடம் ஸஹீஹான ஒரு செய்தி நபியவர்களிடமிருந்து வருமென்றால் நான் என்னுடைய கருத்தை விட்டும் திரும்பக்கூடியவன் என இமாம் ஷாஃபி கூறியுள்ளார்கள்
(இஃலாமுல் முவக்கிஈன் பாகம் 2 பக்கம் : 328).
இந்த அளவிற்கு தெள்ளத்தெளிவாக குர் ஆன் ஹதீஸை பின்பற்றச் சொல்லி மத்ஹபு இமாம்கள் கூறிய கருத்துக்களையெல்லாம் இருட்டடிப்புச் செய்துவிட்டுத்தான் மத்ஹபு இமாம்கள் சொன்னது மார்க்கத்திற்கு முரணாக இருந்தாலும், குர் ஆன் ஹதீஸிற்கு எதிரானதாக இருந்தாலும் அவற்றை ஏற்க வேண்டும். குர் ஆன் ஹதீஸில் உள்ள போதனைகளை பின்பற்றக்கூடாது என்று போலி உலமாக்களால் மூளைச் சலவை செய்யப்படுகின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.