முஸ்லிம் பெண்கள் குறைந்த வயதில், திருமணம் செய்து வைக்கப்படுவதை தடுக்க முடியாது - சந்திராணி
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் குறைந்த வயதில் திருமணம் செய்து வைக்கப்படுவதை தடுப்பது மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சால் மட்டுமே இயலாது என அமைச்சர் சந்திராணி பண்டார பி.பி.சி.யிடம் தெரிவித்தார்.
18 வயதுக்குட்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பில் அந்த சமூகத்திலிருந்தே எதிர்ப்புகள் வருகின்றன என்று அவர் கூறுகிறார்.
இது மதம் சார்ந்த விஷயம் என்பதால் முஸ்லிம் தரப்பினருடன் பேசிய பின்னரே தீர்மானத்திற்கு வர முடியும் எனவும் அமைச்சர் சந்திராணி சொல்கிறார்.
முஸ்லிம் அமைச்சர்கள், சமூகப் பிரதிநிதிகள், நீதி அமைச்சு என பல்தரப்புடன் கலந்துரையாடிய பின்னரே, தன்னால் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என அவர் கூறுகிறார்.
தானும் ஒரு தாய் என்ற வகையில், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் பொதுசட்டங்களின் அடிப்படையில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணம் செய்வது சட்டவிரோதமாகும்.
ஆனால் மத அடிப்படையில் முஸ்லிம் சமூகத்திற்கு இச்சட்டம் பொருந்தாததாக இருக்கிறது.
முஸ்லிம் பெண்களுக்கு 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்வதை மதப் பிரச்சினையாக பார்க்காமல், சிறுவர் நலன் மற்றும் சமூகப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும் என, புதிய அரசியல் சாசனக் குழுவினர் முன்னர் ஆலோசனை வைக்கப்பட்டுள்ளது.
People with knoldge they know the depth of the problem, but unfortunately we have MP they don't know what to talk and what talking. All depends on their society, there upbringing and the knoldge they poses with in them.
ReplyDeleteஅல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் இறுதித் தூதருக்குமா இவர்கள் சிறுவர் நலன் சொல்லிக் கொடுக்கப் போகின்றார்கள். மனித படைப்பிலேயே உத்தமமான நபி (ஸல்) அவர்களை விட சிறுவர்களை நேசித்தவர்கள் வேறு யாருமே இல்லை. நபி (ஸல்) அவர்களின் அனைத்து செயல்களும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படியும், நேரடி வழிகாட்டலிலும் உள்ளவை என்பதை ஐமதத்துல் சலப் தேவ்ளயாக ஏற்றுக்கொண்டதாக இருக்கின்றது.
ReplyDeleteநபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை ஆறு வயதில் நிகாஹ் செய்து, உலகம் அழியும் வரை உள்ள மக்களுக்கு வழிகாட்டியதாக இருக்கின்றது. இதிலை எந்த மாற்றங்களையும் செய்ய எந்த மனிதருக்கும் அதிகாரம் தரப்படவில்லை. அந்தத் தூதருக்கும், அவரை அனுப்பிய அல்லாஹ்வுக்கும் தெரியாததையா இவர்கள் தெரிந்து கொண்டு இருக்கின்றார்கள்? இது புறக்கணிக்கப்பட வேண்டிய பேச்சாகும். அல்லாஹ்வின் கையிற்றை ஒற்றுமையாக பற்றி பிடித்துக்கொள்ளும்படி உம்மத்திற்கு அழைப்பு விடுக்கின்றேன்.
Dear brother anvar, I agree with you
DeleteThese are important decisions to be taken by a Council of Islamic scholars, and not for individuals to give fatwa.
ReplyDeleteமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தநடவடிக்கைகளில் சிக்கி 2006 இல் இடம்பெயர்ந்து 2007 இல் மீள்குடியேறிய வவுணதீவு வெல்லாவெளி கொக்கட்டிச்சோலை, வாகரை, கிரான் செங்கலடி பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில்த்தான் சிறுவயது திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன.
ReplyDeleteஇந்தப்பகுதிகளில் 14- 17 வயதிற்குள் சிறுமிகள் திருமணம் செய்து குழந்தை பிரசவிப்பது சர்வசாதாரண விடயம் என்கிறார்கள் அதிகாரிகள். நன்றி லங்கா ஸ்ரீ நியூஸ்
முதலாவது சீதனத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ReplyDeleteஇது ஒரு புரளி சகல பிரதேசங்களிலும் சகல மதங்களிலும் இது நடைபெறுகிறது
ReplyDeleteஇந்த திருமணம் தொடர்பாக வந்துள்ள ஹதீஸ் ஸஹீகானது என்றாலும், இந்த ஹதீஸை இமாம் மாலிக் றஹ் அவர்கள் தனது முஅத்தாவில் பதியவில்லை. இதற்கு காரனம் கூறும் இமாம் இந்த ஹதீஸ் எனது ஆசிரியர் ஹஸ்ஸான் அவர்களாலே அறிவிக்கப்பட்டுள்ளது, அவர் நம்பிக்கைக்குறியவர். என்றாலும் இவர் இந்த ஹதீஸை அவரது மனநலம் பாத்க்கப்பட்டிருந்த காலத்திலே அறிவித்தார் என்பதனாலாகும் என்கிறார்.
ReplyDeleteWe need to discuss the meter of dowry, as one of the mention above in Jafna Muslim.
ReplyDelete