Header Ads



முறை தவறும் விமானிகள் - இலங்கையின் விமானசேவை, கறுப்புப் பட்டியலிடப்படும் ஆபத்து

சர்வதேச விமானசேவைகள் அமைப்பினால் இலங்கையின் விமான சேவை ஒன்று கறுப்புப் பட்டியலிடப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விமானசேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி நிமலஸ்ரீ இதனை தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸால் நிர்வகிக்கப்படும் மிஹின் எயார் விமானங்கள், 2015ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் திகதி முதல் செப்டம்பர் மூன்றாம் திகதி வரை தொடர்ச்சியாக பறப்பு மீறல்களில் ஈடுபட்டதாக பாங்ஹொக்கை தலைமையகமாக கொண்ட சர்வதேச சிவில் விமானசேவை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு அந்த அமைப்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் 42 பக்க அறிக்கை ஒன்றின்மூலம் விளக்கம் கோரியுள்ளது.

மிஹின் எயார் விமானிகள் பலர் முறைதவறி விமானங்களை செலுத்தியமை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள முக்கிய மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இலங்கையின் சிவில் விமானசேவை அதிகாரசபை உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்றும் சர்வதேச விமான அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

3 comments:

  1. Great!!!

    Just do it...

    ReplyDelete
  2. Great ? Bro we may don't like Mahinda or his Mihin Lanka but this is against a Lankan airline no matter what we have to support our country and its airlines.
    The governing body should act fast and advice the pilots on this issue.
    If they blacklist any airline belong to our country it's not good for us Sri Lankans.

    ReplyDelete
  3. All Srilankan will be benefited if Mihin is black listed.

    ReplyDelete

Powered by Blogger.