இஸ்லாம் இல்லாமல், இந்தியா இல்லை - முஸ்லீம்களின் தேசப்பற்றை சோதிப்பது பெரிய குற்றம் - மணிசங்கர் ஐயர்
டெல்லியில் 'ஜனநாயக இந்தியாவில் இந்திய முஸ்லீம்கள்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர் பேசியவை பின்வருமாறு,
இந்தியாவை பிரிக்கும் போது இங்கேயே (இந்தியாவிலேயே) வாழ்வது என தேர்வு செய்த முஸ்லீம்களுக்கு இந்தியா மீது தேசப்பற்று உள்ளதா? இல்லையா? என சோதித்து பார்ப்பது பெரிய குற்றம்.
இதைவிட மிகப்பெரிய குற்றம் ஏதாவது இருக்க முடியுமா?
இந்தியா இல்லாமல் இஸ்லாம் இல்லை. இஸ்லாம் இல்லாமல் இந்தியா இல்லை. இந்தியாவிற்கும் இஸ்லாமிற்குமான இந்த உறவை முறியடிக்க நினைப்பவர்களே தேச விரோதிகள்.
இந்தியாவை விட்டுச் செல்லும் வாய்ப்பு அன்றைக்கு முஸ்லீம்களுக்கு இருந்தது என்றாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருக்கவே விரும்பினர். முஸ்லீம்களின் தேச விசுவாசத்தை சோதிக்க வேண்டும் என வலியுறுத்துபவர்கள் ஒன்றை மறந்துவிட வேண்டாம். சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய படை ஆசாத் ஹிந்த் பாவுஸ் என்றே உருவாக்கப்பட்டது. சுதந்திர பாரத் சேனா என்று அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.
Post a Comment