Header Ads



இலங்கையின் 34 வது பொலிஸ்மா அதிபராக, பூஜித் ஜயசுந்தர


பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பெயரை அரசியலமைப்பு பேரவை பரிந்துரைத்துள்ளது.

புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் 3.05 அளவில் சபாநாயகர் தலைமையில் கூடியது.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் அரசியலமைப்பு பேரவையில் பிரசன்னமாகி இருந்தனர்.

பேரவையின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் பரிந்துரைக்கு அமைய பூஜித் ஜயசுந்தரவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பு பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் அதில் அங்கம் வகிக்கும் 7 உறுப்பினர்களில் 5 பேர் பூஜித் ஜயசுந்தரவுக்கு வாக்களித்ததுடன் ஒருவர் எஸ்.எம். விக்ரமசிங்கவுக்கு வாக்களித்துள்ளார்.

ஒரு வாக்கு செல்லுப்படியற்றதாக்கப்பட்டது. பூஜித் ஜயசுந்தர தற்போது மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி வகித்து வருகிறார்.

அதற்கமைய, அவரை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கான பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய இலங்கையின் 33வது பொலிஸ் மாஅதிபரான என்.கே. இளங்ககோன் தனது 36 வருட பொலிஸ் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட இடத்திற்கே பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.