நவீன ஏவுகணைகளை, ஈரானுக்கு அனுப்புகிறது ரஷ்யா
உயர்தொழில்நுட்ப
வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ரஷ்யா விரைவில் இரானுக்கு அனுப்பவிருப்பதாக
ரஷ்யாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு இவை அனுப்பிவைக்கப்படுகின்றன.
கண்டம்தாண்டும் ஏவுகணைகளையே சுட்டுவீழ்த்தும் திறன் படைத்த s - 300 அமைப்பானது விரைவில் அனுப்பப்படும் என மூத்த வெளியுறவுத் துறை அதிகாரியை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்தி நிறுவனமான இன்டர்ஃபேக்ஸ் கூறுகிறது.
இந்த வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கான 900 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தம் 2007ல் கையெழுத்தானது.
ஆனால், இரான் மீது ஐ.நா. தடைகளை விதித்ததையடுத்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது.
இரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டதையடுத்து, இந்த ஒப்பந்தத்தை ரஷ்ய அரசு புதுப்பித்தது.
ஆனால், இந்த கருவிகளை இரானுக்கு வழங்குவதை இஸ்ரேல் எதிர்க்கிறது.

Post a Comment