பனாமாவில் இலங்கை, பிரமுகர்களின் பணம்
11 மில்லியனுக்கும் மேற்பட்ட வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை பனாமா பேப்பர்ஸ் மூலம் கசிந்துள்ளமையால் உலகளாவிய ரீதியிலுள்ள பிரபலங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த இரகசிய ஆவணங்களில் இலங்கையும் உள்ளதாக ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உலகில் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் பதுக்கி வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த கணக்குகள் தொடர்பான தகவல்களை கொண்டு ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை உலகின் இரகசிய நிறுவனங்கள் என்ற தலைப்பின் கீழ் வரைபடமொன்றை தயாரித்துள்ளது.
இதில் இலங்கையும் உள்ளடங்குவதுடன், மூன்று நிறுவனங்களுக்கு சொந்தமான மூன்று வாடிக்கையாளர்கள் மற்றும் 22 பங்குதாரர்கள் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் உட்பட உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களின் பெயர்கள் குறித்த கணக்கில் உள்ளடங்குகின்றதா என உடனடியாக கண்டுபிடிக்க அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் இருந்த வேளையில், ராஜபக்ஷ குழுவினரால் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எல்லாம் ஒரு கண்துடைப்புதான் இந்த நல்லாட்சி எதை சொல்லி ஆட்சிக்கு வந்தது என்று நாடறிந்த விடயம். முதலில் கடந்த ஆட்சியில் நடந்த முறை கேடான நடவடிக்கை மூலம் பெறப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்கள், பணபரிமாற்றங்கள், மற்றும் இன்னோரன்ன கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக நீதியான முறையில் விசாரித்து தண்டனை வழங்குவதாக தேர்தல் காலத்தில் பிரசாரம் மூலமாக வாய் வார்த்தைகளை அள்ளிக்கொட்டினர். இன்றுடன் ஒருவருடத்தையும் தாண்டி இரண்டாவது வருடத்தை எட்டிப்பிடிக்கவுள்ள நேரத்தில் இதுவரைக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கம் எத்தனை வழக்குகளை முடித்து உள்ளது எத்தனை பேருக்கு அல்லது எவருக்கு தண்டனை வழங்கி உள்ளது என்பதை பார்க்கும் பொது அது பூச்சியமாகவே உள்ளது.
ReplyDeleteஇதில் வேறு பனாமாவில் பதுக்கி உள்ள பணம் பற்றி தெடபோகின்றனர் அதுவும் கடந்தகால ஆட்சியின் பொது ராஜபக்ஸ குடும்பத்தினரால் பல பில்லியன் டொலர்கள் இதில் உள்ளதா என்று அரசாங்கம் கண்டு பிடிக்க அரசாங்கத்தின் கவனம் திரும்பி உள்ளதாம். ஹ்ம்ம் இது வேறு ஒன்றுக்கும் அல்ல இனி வரும் தேர்தல்களில் இதையும் தேடி வைத்து மக்களின் புத்தியை மழுங்கடித்து வாக்குகளை தன் பக்கம் ஈர்கவே இந்த நாடகம் இதுவெல்லாமல் வேறு எதற்கும் அல்ல.
இலங்கையேய் பொறுத்தவரையில் ஆட்சிக்கு மாறி மாறி வரும் இந்த இரு கட்சிகளும் ஒரு நாளும் பில்லியன் கணக்கில் மோசடி , பணப்பதுக்கள் , போன்ற இன்னோரன்ன குற்றங்களுக்கு ஒருநாளும் தண்டனை கொடுப்பதும் இல்லை கொடுக்க போவதும் இல்லை. மேடை பேச்சோடும் உடகவியலாளர் மகாநாட்டோடும் இவர்கள் கதை முடிந்து விடும் , ஆனால் சிறு குற்றம் செய்த அப்பாவிகள் தான் எப்போதும் சிறை போவதும் தண்டனை பெறுவதும் இவர்கள் தான் நாட்டில் ஆக பெரிய குற்றம் செய்தவர்கள் ஆக கண்டுபிடிப்பார்கள்.
உண்மை சொன்னீர்கள் Ishak Raheem, எல்லாம் வெறும் Drama சினிமா பாணியில் நிகழ்வன. இந்த நல்லாட்சியில் குற்றவாளில் மிகப் பாதுகாப்பாக உள்ளனர்!
ReplyDelete