அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்படாத, அரசியல்வாதிகளை நாம் உருவாக்க வேண்டும் - ஹக்கீம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி அரசியல் சார்ந்த பதவியாக இருக்கக் கூடாது.அது நிர்வாகம் சம்பந்தப்பட்ட பதவியாக இருக்க வேண்டும்.முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு கட்சி வேண்டும் என்ற நிலைமை மாறி இப்போது ஒவ்வொருவருக்கும் ஒரு கட்சி வேண்டும் அமைச்சுப் பதவியைப் பெறுவதற்காக ஒரு கட்சி வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது என்று சிறிலங்கா காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று [02-04-2016] தெரிவித்தார்.
அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்படாத-சமூகத்துக்காக உழைக்கின்ற அரசியல்வாதிகளை நாம் உருவாக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
சம்மாந்துறையில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் அந்நிகழ்வுகளில் மேலும் கூறியவை வருமாறு;
இந்தவொரு நல்ல நிலையில்,எமது கட்சியைப் பிளவுபடுத்தும் சதித் திட்டங்கள் எமது கட்சியைச் சேர்ந்த சிலராலே அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்த மரத்தை எந்தச் சதிகளாலும் அழிக்க முடியாது.இந்த கட்சி இலங்கை முஸ்லிம்களின் முதுகெலும்பு. அதை எவராலும் உடைக்க முடியாது. ஒரு காலத்தில் இந்த சமூகத்துக்கு ஒரு கட்சி வேண்டும் என்று கூறினார்கள்.இன்று ஆளுக்கொரு கட்சி தேவை என்ற நிலைமை வந்துவிட்டது. அவர்கள் அமைச்சர்களாவதற்கு இந்தக் கட்சிகள் தேவைப்படுகின்றன.
இந்த நிலைமை சமூகத்துக்கு ஆபத்தானதாக அமையும்.பதவி ஆசை இல்லாத-சமூகப் பற்றுள்ள அரசியல்வாதிகளை நாம் உருவாக்க வேண்டும்.
இந்தப் பதவி ஆசையால் இப்போது எமது கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.கட்சியின் செயலாளர் பதவி என்பது அரசியல் பதவியாக இருக்கக் கூடாது.அது நிர்வாகப் பதவியாக இருக்க வேண்டும்.இந்தக் கட்சியை நாம் இன்னும் மக்கள் மயப்படுத்த வேண்டும்.இது முஸ்லிம்களின் ஏகோபித்த கட்சி.பல திருத்தங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.-என்றார்.
இதனை முதலில் தலைமைத்துவம் பின்பற்ற வேண்டும்
ReplyDeleteஎனக்கில்லடி உபதேசம் ஊருக்கெடி.எனக்கு மட்டும் தான் அமைச்சு பதவிகள.வேறு யாரும் கனவு காண கூடாது.
ReplyDeleteவரவேற்கப்படக்கூடிய கருத்து. ஆனால் பதவிக்கு வரும் சனாதிபதி,பிரதமர்களின் காதல் பொம்பை என உங்களை வர்ணிக்கின்றார்களே அதன் உண்மை அர்த்தம் என்ன என்று சொல்லி்தருவீர்களா?
ReplyDeleteDear Hon Minister,
ReplyDeleteThere is a saying "DESERVE AND THEN DISIRE". It has to be first applicable to you. From the time of the demise of the Muslim leader, the late Ashraf, you wanted to be the Minister through out the time, selling all muslim dignity and you have been the minister for the last more than 15 years, but done nothing for the Muslim community compared to other muslim leaders. What a shame......
Joke of the century -
ReplyDeleteHallo Mr hakeem உங்களை ஒங்கள ஒருத்தரும் ஒன்டும் செய்ய ஏலாது ஆனா முசிலிம் கட்சியை உருவாக்கின எங்கள போன்றவங்க நிறைப்பேருக்கு உம்மை வெறுத்து போச்சி் இந்த கட்சியை விட்டும் உம்மை முதலில் துரத்தினால்தான் மற்றவை எல்லாம் செரியாகும் பதவி மோகம் பிடித்தவனே உனக்கு மட்டம் பதவி மற்றவங்க அதை நினைக்கவும் கூடாது அப்படி உன் எண்ணம் நீ தான் ஆகவும் பதவி வெறி பிடி்த்தவன் அதை மறந்து விடாதே உனக்கு இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் பாடம் புகட்டுவோம்
ReplyDeleteThe SLMC is not a genuine political party for Sri Lankan Muslim community now which is cooperative national list traders society and business of National list MP & ministers that are owned and managed by the Minister Br. Rauff Hakim who is such a comedy actor CHARLIE CHAPLIN and Mr. Bean's drama for all Sri Lankan Muslim community after the dead of former SLMC Leader, Minister A.H.M. Azhraf. this is our fate anof Poor & innocent Muslim community. becoz No one taking genuine action for the safety, security & welfare of Muslims in sri Lanka except ALLAH.Even Minister Br. Rauf Hakim Sir should think million times & learn about former education minister Badiuddin Mahmoud who was born in his Native place and he did lot & unforgettable great help for all Muslims community in Sri Lanka in his time in the right path of ALLAH with Islamic principle.even if he unable to follow the former SLMC Leader A.H.M. Azhraff as We need rectification plan with action to remove the grass in SLMC.
ReplyDeleteYa allah guide them in right path
ReplyDeleteSome one need to be example for it. Let watch who start it.
ReplyDeleteகேக்குறவன் கேனயன் எண்டா..எரும மாடும் ஏரப் பிலேன் ஓட்டுமாம்...
ReplyDeleteThe problem here seniors like hasan ali, bashher segu thavuthu asking national list em pee for ever . their village ninthavur and eravur alreadty have em pees . national list should be given to other part of the country as well.
ReplyDeleteசரி எல்லாவற்றையும் மறப்பாே்ம்.முஸ்லீம் காங்கிரஸிலுள்ள அனைபேரும் அமைச்சு பதவிக்கு ஆசைப் படக் கூடாதென்றால் மற்றவர்களுக்கு உதாரண புருசராக இருந்து தங்ஙளுடைய பதவியை ராஜினாமா செய்ய முடியுமா?
ReplyDeleteசத்தியமாக நீங்கள்ொல்வது சரி
Delete