Header Ads



கொழும்பு - கண்டி அதிவேகப்பாதை அமைக்கும் பணி, ஜுனில் ஆரம்பம்


கண்டி-கொழும்பு அதிவேகப் பாதை அமைக்கும் பணிகள் ஜுன் மாதம் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிவேகப் பாதை அமைப்பு பணிகளுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 3 கட்டங்களாக குறித்த வீதி அமைக்கும் பணிகள் ஆரம்பமாகும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் குறித்த அதிவேகப் பாதை அமைப்பிற்காக பெறப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கான நஸ்ட ஈடுகள் சந்தையின் தற்போதைய பெறுமதிக்கேற்ப வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.