யாழ்ப்பாண முஸ்லிம்களின், அவசர கவனத்திற்கு
-Jan Mohamed-
இந்திய வீடமைப்புத் திட்டம் யூரோப்பியன் வீடமைப்புத் திட்டம் என பல திட்டங்களுக்கு பதிவுகள் மேற்கொள்ளப் பட்டு 48 வீடுகள் மட்டும் முஸ்லிம்களுக்கு வழங்கி தமிழ் அரசங்க அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்திருந்தனர். இன்நிலையில் மீள்குடியேற்ற அமைச்சும் புதிய வீடமைப்பு திட்டம் ஒன்றை செயற்படுத்த உள்ளது. இதன் கீழ் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப் பட்ட எல்லோருக்கும் வீடமைப்புத் திட்டம் வழங்கப் பட உள்ளது.
இதற்காக வேண்டி அடுத்த மூன்று ஆண்டுகளில் 65000 வீடுகள் கட்டப் படும். இதற்காக ஏற்கனவே 29000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. இதில் நூறு விண்ணப்பங்களே யாழ்ப்பாண முஸ்லிம்களால் வழங்கப் பட்டுள்ளதாக அறியப் படுகின்றது. 2000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டாலும் எல்லா முஸ்லிம்களுக்கும் வீடுகள் இம்முறை இன்ஷா அல்லாஹ் கிடைக்கும். மேலும் இத்திட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இடம் பெறுகின்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள அரச அதிகாரிகள் முஸ்லிம்கள் விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதும் உற்று நோக்கப் படுகின்றது. இவர்கள் முஸ்லிம்கள் விடயத்தில் அநீதியாக நடந்து கொண்டால் அதனை வைத்து தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கவும் முடியும். மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அதிகாரிகள் அதிகார துஸ்பிரயோக குற்றச் சாட்டின் கீழ் கைது செய்யவும் படக் கூடும்.
எனவே பல்வேறு ஊர்களிலும் வாழும் யாழ் முஸ்லிம்கள் யாழ் சென்று 65000 வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப் பத்தை சம்ர்ப்பியுங்கள். இதற்காக வேன்டி பின்வரும் ஆவணக்கள் தேவைப் படும்.
1. விண்ணப்ப பத்திரம் - யாழ் பிரதேச கிராம சேவகர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
2. காணி உறுதி மற்றும் காணி வரைபு போட்டோ பிரதிகள்
3. காணி உரிமையாளர் குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டையின் போட்டோ கொப்பி. தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் வாகன லைசன்ஸ்; சிறுவர்கள் ஆயின் அவர்களின் பிறப்பு அத்தாட்சிப் பத்திர பிரதிகளின் கொப்பிகள்
4. தற்போது வசிக்கும் பிரதேச கிராம அலுவலரிடமிருந்து யாழ்ப்பாணம் சென்று அங்கு பதிவுகளை மேற்கொள்வதற்கான கடிதம். இதனை தற்போதுள்ள பிரதேசத்திலுள்ள பிரதேச செயலாளர் அல்லது அவரின் பிரதிநிதி உறுதிப் படுத்தி கையொப்பமிட்டு ஸ்டாம்ப் குத்த வேண்டும். இதில் மூன்று போட்டோ கொப்பிகள் தேவை.
5. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் 'அ' கார்ட் வைத்திருப்பவராயின் அதன் ஒரிஜினலும் போட்டோ கொப்பியும்
இதற்கான விண்ணப்ப முடிவு திகதி ஏப்ரல் 14, 2016 ஆகும்.
6. விவாகப் பதிவுப் பத்திரம் கொப்பி (இருந்தால் நல்லது)
எனவே உடனடியாக யாழ் சென்று இந்தப் பதிவுகளைச் செய்யவும். குடும்பத்தில் ஒரு உறுப்பினர் சென்றால் போதுமானது. காணி மனைவியின் பெயரில் இருந்தால் மனைவியிடமிருந்து ஒரு கடிதம் தேவை. அதில் எனது காணியில் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடமைக்க விரும்புகின்றேன். எனது கணவனுக்கு இது சம்பந்தமான பதிவுகளை அவர் பெயரில் செய்ய அனுமதிக்கின்றேன் என்று கணவனின் பெயர் மனைவியின் பெயர் என்பவற்றையும் குறிப்பிட வேண்டும்.

நன்றி : யாழ் முஸ்லிம் மீள் குடியேற்றத்துக்கான உரிமை அமைப்பு
Post a Comment