எதிர்காலத்தில் ஹசன் அலி, கவலைப்பட வேண்டியேற்படும் - ஹரீஸ்
(ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்)
கட்சிச் செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டமை தலைவர் ஹக்கீமின் நலனுக்காக அல்ல, மாறாக கட்சி நலனுக்காகவே அன்றி இது திட்டமிட்டு கட்சிச் செயலாளர் ஹசன் அலிக்கு செய்யப்பட்ட அநீதியல்ல. அவர் கட்சியை விட்டு தூரப்படுகின்றபோது அவர் எதிர்காலத்தில் கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் தொகுதி மத்திய குழு கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கட்சியின் செயற்பாட்டை வினைத்திறன் மிக்கதாக மாற்ற வேண்டிய காலத்தின் தேவை ஏற்பட்டது. அதற்காக கட்சியின் உயர்பீடம் கூடி செயலாளர் பதவிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். கட்சி செயலாளராக இருப்பவரை அரசியல் பதவிகளில் அமர்த்தக்கூடாது. அவர் கட்சி பணிகளில் தன்னை முழு நேரம் ஈடுபடுத்த வேண்டும். கட்சித் தலைமைக்கும் கட்சிக்கும் விசுவாசமாக செயற்பட வேண்டும் என்ற ஆலோசனையை கட்சித் தலைமைக்கு வழங்கியது.
இதன் நிமித்தம் கட்சிச் செயலாளர் ஹசன் அலி இருக்கத்தக்கதாக கட்சி செயலாளர் பதவிகளில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என கட்சியின் உயர்பீடம் தீர்மானித்து அதனை பேராளர் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்தீர்மானம் செயலாளர் ஹசன் அலிக்கு அநீதியிழைக்கும் செயலாக இருந்திருந்தால் அந்நேரமே ஹசன் அலி இதற்கு எதிராக பேசியிருக்க வேண்டும். அவ்வாறு அன்று அவர் செய்யாமல் இன்று கட்சித் தலைமைக்கு பல நெருக்குவாரங்களை கொடுத்துவிட்டு இன்று அவர் குறைக்கப்பட்ட அதிகாரங்களை மீளத் தரவேண்டும் என ஊடகங்கள் வாயிலாக அறிக்கைகள் விடுகின்றார்.
கட்சியின் உள்விபகாரங்களை நாம் சுமுகமாக பேசித் தீர்த்துக் கொள்ளலாம். இதற்காக கட்சி தலைமை தயாராக உள்ளது. ஆனால் செயலாளர் ஹசன் அலி சிலரின் தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றார். இதனால் கட்சிக்கு பல சதிகள் திரைமறைவில் இடம்பெறுகின்றது. இதிலிருந்து ஹசன் அலி மீண்டு வரவேண்டும். அவர் கட்சியை விட்டு தூரப்படுகின்றபோது அவர் எதிர்காலத்தில் கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
ஹரீஸ் அவர்களே, சுயநலத்துக்காக அரசியல் செய்யும் நீங்கள், இந்த தலைமையை விமர்சித்து இந்த கட்சிக்கு எதிராக தேர்தலில் நின்று தோற்று, மீண்டும் கட்சியில் சேர்ந்து பின் மேயர் பதவி பெற்று, பின் பாராளமன்றம் சென்று, அதன் பின்..... பதவிகளுக்காக பல முயற்சி செய்து,...... கட்சியை காப்பாற்ற ராஜபக்சவிடம் சென்றதாக நீங்கள் கூறும் தலைமை கூற....... பெரும் பித்தலாட்டம் காட்டிக்கொண்டிருக்கும் உங்கள் கூட்டமும், தலைமையும்.... மீண்டும் தலைமைக்கு சாமரம் வீச ஆரம்பித்துள்ளீர்கள், ஹசன் அலிக்கு அறிவுரை கூறவும் ஆரம்பித்து விட்டீர்கள், பிரதித் தலைவர் அல்லவா....! முஸ்லிம்களுக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினையை விட்டு விட்டு கட்சியின் செயலாளர் பதவியும் அதன் செயற்பாடும் தான் உங்கள் கண்களுக்கு புரிகிறது. யாருக்கு காது குத்துகிறீர்கள்? செயலாளர் பதவிக்கு பொருந்தும் அனைத்தும், தலைவர் பதவிக்கும் பொருந்தும் என்பதையும் சுட்டி காட்ட விரும்புகிறோம். அந்த பதவிக்கும் அரசியல் அற்ற ஒரு தலைவரை ( இரான் மாதிரி ஆத்மீக தலைவர் ) நியமிக்கலாம் தானே???. தலைமைத்துவம் நினைத்ததையெல்லாம் செய்வதற்கு ஹசனலியின் சில நியாயமான எதிர்ப்புகளும், ஆமாம் சாமி போடாததுமே முதற் காரணம் என்பதை நீங்களும் அறிவீர்கள் அல்லது அறிந்து கொள்ளுங்கள், மக்களும் அறிவார்கள். உங்கள் தலைமையும் அரசியல் பிரமுகர்களும் பதவிக்கும், பணத்துக்கும், சலுகைகளுக்கும் தான் இந்த கட்சியை பாவிக்கிறீர்கள். அதை நாங்கள் கன்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேசியப் பட்டியல் எம்பியை இத்தவறை தீர்மானித்துக் கொள்ள முடியாமல் தடுமாறும் ஒரு தலைமை..... மைத்திரிக்கு தபால் வாக்குகள் போடும் வரை முடிவு எடுக்காத தலைமை...., மனசாட்சி படி வாகளிக்குமாறு கூறிய தலைமை........இப்படி நிறைய கூரலாம். எனவே இதில் மாற்றம் வேண்டும். நிட்சயமாக தலைமையில் மாற்றம் வேண்டும். முடிந்தால் முயற்சி செய்யுங்கள் அப்படி இல்லையாயின் நிட்சயம் மக்கள், புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் அதை செய்வார்கள் அல்லது மாற்று வழி காண்பார்கள்.
ReplyDeleteஹரீஸ் அவர்களே, சுயநலத்துக்காக அரசியல் செய்யும் நீங்கள், இந்த தலைமையை விமர்சித்து இந்த கட்சிக்கு எதிராக தேர்தலில் நின்று தோற்று, மீண்டும் கட்சியில் சேர்ந்து பின் மேயர் பதவி பெற்று, பின் பாராளமன்றம் சென்று, அதன் பின்..... பதவிகளுக்காக பல முயற்சி செய்து,...... கட்சியை காப்பாற்ற ராஜபக்சவிடம் சென்றதாக நீங்கள் கூறும் தலைமை கூற....... பெரும் பித்தலாட்டம் காட்டிக்கொண்டிருக்கும் உங்கள் கூட்டமும், தலைமையும்.... மீண்டும் தலைமைக்கு சாமரம் வீச ஆரம்பித்துள்ளீர்கள், ஹசன் அலிக்கு அறிவுரை கூறவும் ஆரம்பித்து விட்டீர்கள், பிரதித் தலைவர் அல்லவா....! முஸ்லிம்களுக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினையை விட்டு விட்டு கட்சியின் செயலாளர் பதவியும் அதன் செயற்பாடும் தான் உங்கள் கண்களுக்கு புரிகிறது. யாருக்கு காது குத்துகிறீர்கள்? செயலாளர் பதவிக்கு பொருந்தும் அனைத்தும், தலைவர் பதவிக்கும் பொருந்தும் என்பதையும் சுட்டி காட்ட விரும்புகிறோம். அந்த பதவிக்கும் அரசியல் அற்ற ஒரு தலைவரை ( இரான் மாதிரி ஆத்மீக தலைவர் ) நியமிக்கலாம் தானே???. தலைமைத்துவம் நினைத்ததையெல்லாம் செய்வதற்கு ஹசனலியின் சில நியாயமான எதிர்ப்புகளும், ஆமாம் சாமி போடாததுமே முதற் காரணம் என்பதை நீங்களும் அறிவீர்கள் அல்லது அறிந்து கொள்ளுங்கள், மக்களும் அறிவார்கள். உங்கள் தலைமையும் அரசியல் பிரமுகர்களும் பதவிக்கும், பணத்துக்கும், சலுகைகளுக்கும் தான் இந்த கட்சியை பாவிக்கிறீர்கள். அதை நாங்கள் கன்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேசியப் பட்டியல் எம்பியை இத்தவறை தீர்மானித்துக் கொள்ள முடியாமல் தடுமாறும் ஒரு தலைமை..... மைத்திரிக்கு தபால் வாக்குகள் போடும் வரை முடிவு எடுக்காத தலைமை...., மனசாட்சி படி வாகளிக்குமாறு கூறிய தலைமை........இப்படி நிறைய கூரலாம். எனவே இதில் மாற்றம் வேண்டும். நிட்சயமாக தலைமையில் மாற்றம் வேண்டும். முடிந்தால் முயற்சி செய்யுங்கள் அப்படி இல்லையாயின் நிட்சயம் மக்கள், புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் அதை செய்வார்கள் அல்லது மாற்று வழி காண்பார்கள்.
ReplyDeleteமக்களுக்காக அரசியல் செய்யும் ஒருகூட்டம் வரும் இறைவனை மறந்து மனசாட்சிக்குக்கூட இடமளிக்காமல் வாழ்வோருக்கு இறைவனின் தண்டனை இன்று அல்லது நாளை நிச்சயம்.யாரும் அதனை மறந்துவிட வேண்டாம்.
ReplyDelete