டொய்லட் பேப்பராக ஒபாமா
ரஷ்யா
நாட்டில் புதிதாக திறக்கப்பட்டுள்ள உணவகம் ஒன்று அமெரிக்க ஜனாதிபதியான
ஒபாமாவை மிகவும் கீழ்த்தரமாக அவமதிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் இருந்து சுமார் 4,000 மைல்கள் தொலைவில் Krasnoyarsk என்ற நகரம் அமைந்துள்ளது.
இந்த நகரில் கடந்த மாதம் ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடினை பெருமைப்படுத்தும் வகையில் ‘President Café’ என்ற உணவகத்தை பெயர் வெளியிடப்படாத ஒருவர் புதிதாக திறந்துள்ளார்.
இந்த உணவகத்தின் வரவேற்பறையில் விளாடிமிர் புடினின் குழந்தை பருவம் முதல், அவர் பல்வேறு சாதனைகளை புரிந்து ஜனாதிபதி பதவி ஏற்றது வரையிலான பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இது மட்டுமில்லாமல், பிரித்தானிய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரதமர் டேவிட் கமெரூன் மற்றும் ஜேர்மனி சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் போன்ற தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், ரஷ்ய ஜனாதிபதியின் மெழுகுச்சிலையும் வைக்கப்பட்டுள்ளதால், உணவகத்திற்கு வருபவர்கள் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.
இவை எல்லாம் ரஷ்யாவையும், ஜனாதிபதி புடினையும் பெருமைப்படுத்த அந்த உணவகத்தின் உரிமையாளர் இந்த வேலைபாடுகளை செய்துள்ளார்.
ஆனால், இந்த உணவகத்தின் கழிப்பறையில் உரிமையாளர் செய்துள்ள வேலைபாடுகள் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கழிப்பறைக்குள் நுழைந்தவுடன், கீழே தரையில் போடப்படும் ‘தரை விரிப்பு’(Floor-mat) அமெரிக்க தேசிய கொடியில் இருக்கிறது. உணவகத்திற்கு வருபவர்கள் அதன் மீது ஏறி நிற்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இவை எல்லாம் விட, கழிவறையில் உள்ள ‘டாய்லெட் பேப்பரில்’(Toilet Paper) அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment