Header Ads



அக்கரைப்பற்று அரசியல்வாதிகளே, கல்வி அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு..!!

Assalamu Alaikkum ww.

சற்று தலைசாய்த்து கேளுங்கள், யாரையும் குறை கூறவோ, விமர்சிக்கவோ பேசவில்லை. நாளை நமது சமூகம் அழிந்து விடக்கூடாது. இலங்கையில் காணப்படுகின்ற இலவசக்கல்வி எனும் மிகப்பெரும் சொத்தை இழந்த சோகம். இயற்கையே விரும்பாத நிகழ்வு நடந்தேறி இருக்கிறது.

அக்கரைப்பற்று வலயக்கல்வி அதிகாரிகளே....

அக்கரைப்பற்று வலயத்திற்கு உட்பட்ட பொத்துவில் பிரதேச அக்/ ஆத்திமுனை கவிவாணன் எம். ஏ. அஸீஸ் வித்தியாலயம் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இழுத்து மூடப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தின் அத்தியாவசிய தேவையான அடிப்படை கல்வியை கூட தொடர இயலாம இருப்பது அச்சமூகத்தை கேள்விக்குறியாக்கி இருக்கின்றது. ஒரு சமூகத்தின் கல்வி வாசல் மூடப்படுவது என்பது அச்சமூகத்தையே நிராகரிக்கும் செயலாகும். 

கிழக்குமாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது ஏற்று கொள்ளமுடியாத காரணம், அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட பல பிரதான பாடசாலைகளில் மேலதிகமாக ஆசியர்கள் இருப்பதாக புள்ளி விபர அறிக்கை சொல்கிறது. அப்படி இருந்தும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக ஒரு பாடசாலை மூடப்படுவது என்பது எந்தவகையில் நியாயமானது. 

ஆசிரியர் பற்றாக்குறை என்பதை ஏற்று கொண்டாலும், பாடசாலைகளுக்கான ஆசிரியர் குறைகளை கண்டறிந்து நிறைவேற்ற வேண்டிய வலயக்கல்வி அதிகாரிகளின் பொறுப்பு என்பதை மறந்து விட்டார்களா? 

மாகாண கல்வி பணிப்பாளரின் உதவியுடன் இப்பிரச்சினையை  சரியான முறையில் கையாண்டு தீர்வுகளை  பெற்றுக்கொடுப்பது அதிகாரிகளின் கடமை அல்லவா. 

இன்னும் எத்தனை பாடசாலைகள் மூட தீர்மானிக்க போகிறீர்கள். 

மாகாண கல்வி பணிப்பாளரே, வலயக்கல்வி கல்வி அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு. 

மக்கள் வீதியில் இறங்குவதற்கு முன், உங்களது நிறைவான சேவைகளை மக்கள் சேவகனாக இருந்து செய்து முடியுங்கள்.

அல்லாஹ்விடம் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். 

அரசியல் அதிகாரிகளே .....

ஒரு சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதில் மிகப்பெரும் இடத்தை நிரப்பி கொள்வது பள்ளிவாயல்களும், பாடசாலைகளும் ஆகும்.

துரதிஸ்டம் பள்ளிவாயல்களும், பாடசாலைகளும் அரசியல்வாதிகளின் அலுவலகமா இயங்குகிறது. இது மிக வேதனைக்குரிய விடயமாகம் . 

பள்ளித் தலைவர்களும், நிர்வாகிகளும் அரசியல் வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இயங்குகின்ற துர்ப்பாக்கிய நிலை.

அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் அரசியல் சிந்தனைக்குள் உள்வாங்கப்பட்டு  கல்வியின் அடைவுகள் வீழ்ச்சி கண்டுள்ளது. 

கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலான பாடசாலைகளின் அடைவுளை புள்ளி விபர அடிப்படையில் நோக்கும் போது எமது சமூக அதள பாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பது வெளிப்படை உண்மை. 

சிறந்த ஆசிரியர்கள், நவீன வளர்ச்சிகள் காணப்படும் போது கல்வி வீழ்ச்சிக்குரிய காரணம் என்ன?

பள்ளி தலைவர்கள் தெரிவில் அரசியல், பள்ளி நிர்வாகத் தெரிவில் அரசியல், பாடசாலை அதிபர் தெரிவில் அரசியல், ஆசிரியர்கள் மத்தியில் அரசியல் , மாணவர்கள் மத்தியில் அரசியல். இப்படி அரசியலின் தாக்கம்  ஒவ்வொரு இடத்திலும் தாண்டவம் ஆடுகிறது.

அரசியல் வாதிகளே இது மகா தவறு அல்லாஹுத்தாலா விரும்பும் இரு இடங்கள். இவற்றிலிருந்து உங்கள் அரசிலை தூரமாக்கி கொள்ளுங்கள். 

அரசியல் தலைமைகளே சிந்தியுங்கள், நாளை  நமது சந்ததிகளுக்கு எதை விட்டு செல்ல இருக்கிறோம். மக்களால், மக்களின் பிரதிநிதிகளாகவே தெரிவு செய்ப்பட்டுள்ள நாம், நமது கடமை தவறி தூரமாகி நிற்கிறோம் என்று சிந்தித்த துண்டா?

பிரச்சனைகளை மக்கள் கையில் எடுத்துக் கொண்டால், உங்களின் நிலை என்னவாகு இருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள்.

அக்கரைப்பற்று வலயக்கல்வி அதிகாரிகளே, அரசியல் அதிகாரிகளே .....

மூடப்பட்டுள்ள  அக்/ ஆத்திமுனை கவிவாணன் எம். ஏ. அஸீஸ் வித்தியாலயம் மீண்டும் திறக்கப்பட வேண்டும். அதற்குரிய அனைத்து விதமான தேவைகளையும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அச்சமூக கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுடையது.

இப்பணியை நீங்கள் செய்யாவிடில், மக்கள் செய்யவார்கள். அந்நேரம் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும். இன் ஷா அல்லாஹ்

உங்களின் பணியை எதிர்பார்த்தவர்களாக, என்று உங்களுடன் வாழும் உள்ளங்கள். 

மனாப் அஹ்மத் ரிசாத் 
அக்கரைப்பற்று .

1 comment:

  1. இஸ்லாமியர்களின் கண் கல்வி கல்விக்கூடத்தை மூடிவிட எந்த கண்கெட்ட அதிகாரிகளின் உத்தரவு?நாளை கியாமத் நாளில் குருடர்களாக எழுப்பப்படமாட்டீர் என்பதற்கு என்ன உத்தரவாதம்

    ReplyDelete

Powered by Blogger.