அரசாங்கமே அனைத்தையும், செய்யுமென்ற எதிர்பார்ப்பு வேண்டாம் : சந்திரிக்கா
அரசாங்கமே அனைத்தையும் செய்யும் என்ற எதிர்பார்ப்பு கைவிடப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
திறந்த பொருளாதார கொள்கையின் ஊடாக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பலவற்றை பொதுமக்களுக்கும், சிவில் அமைப்புக்களுக்கும், தனியார் துறையினருக்கும் பகிர்ந்தளிக்கக்கூடிய காலம் வந்துவிட்டது.
எனவே அரசாங்கமே அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு களையப்பட வேண்டும். பல்வேறு பொது செயற்பாடுகளுக்கு பொதுமக்களும், சிவில் அமைப்புக்களும், தனியார் துறையினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
Post a Comment