Header Ads



மகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை, மைத்திரி தீர்மானிப்பார்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பில் எடுக்க வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கை சம்பந்தமாக ராஜதந்திர ரீதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிப்பார் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான கட்சியின் மத்திய செயற்குழு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கின்றது.

எனினும் கட்சியின் ஆலோசர்களுக்கு அவ்வாறான நடவடிக்கை ஏன் எடுக்கப்படுவதில்லை என கொழும்பில் இன்று -18-  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர்,

இந்த கேள்வியானது முன்னாள் ஜனாதிபதி சம்பந்தமானது என்பதால், ஏனைய மக்கள் பிரதிநிதிகள் தொடர்பாக செயற்படும் விதத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக செயற்பட முடியாது என்றார்.

மேலும் மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் என்பது மட்டுமல்ல நாட்டின் முன்னாள் ஜனாதிபதி.இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுடன் அவரை ஒப்பிட முடியாது.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் தீர்மானிப்பார்

கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு திருந்த காலஅவகாசம் வழங்கப்பட்டதாகவும் தற்போது அவர்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கும் காலம் வந்துள்ளதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு கட்சிக்கு இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது. தலைமைத்துவம் மற்றும் செயற்குழுவின் தீர்மானங்களுக்கு அமையவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்படும்.

இதனடிப்படையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரபூர்வ மே தினக் கூட்டம் காலியில் நடைபெறும்.

இதில் கலந்து கொள்ளாதவர்கள் தொடர்பாக கட்டாயம் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.