ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத், நிறைவேற்றியுள்ள முக்கிய தீர்மானங்கள்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 05வது தேசிய பொதுக் குழு கண்டி, திகன ஒரியன்ட் வரவேற்பு மண்டபத்தில் ஜமாத்தின் தலைவர் சகோ. ரியால் தலைமையில் நேற்று நடைபெற்றது. குறித்த பொதுக் குழுவில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம்: 01
முஹம்மத் ரசூலுல்லாஹ்" என்ற கோஷத்துடன் நாடு முழுவதும் பாரியளவிலான பிரச்சாரத்தை முன்னெடுப்பது.
இவ்வருடம் முழுவதும் "முஹம்மத் ரசூலுல்லாஹ்" என்ற மகுடத்தில் நாடு முழுவதும் தெருமுனைப் பிரச்சாரங்கள், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், விழிப்புணர்வு பதாகைகள் வைத்தல், பொதுக் கூட்டங்கள், அரங்க நிகழ்ச்சிகள் நடத்துதல், மாவட்ட மாநாடுகள் நடத்துதல் போன்றவற்றினூடாக முஹம்மது நபி இறைவனின் இறைத் தூதர் என்பதையும், அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி அவன் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்றி வாழ வேண்டும் என்பதை விளக்குவதுடன், இஸ்லாத்திற்க்கு மாற்றமான மத்ஹபுகள், தரீக்காக்கள், வழிகெட்ட சிந்தனைகள் போன்றவற்றை விட்டும் மக்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பது என இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம்: 02
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாய்ந்தமருது கிளைக்குள் அத்துமீறிய காவல் துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சாய்ந்தமருது கிளையின் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் அத்துமீறி நுழைந்து, நிகழ்ச்சிக்கு குந்தகம் விளைவித்ததுடன் மட்டுமல்லாது, தொழுகை நடத்தும் இடத்தினுல் சப்பாத்துக் காலுடன் உள் நுழைந்து மத நிந்தனை செய்து, அநாகரீகமாக நடந்து கொண்ட கப்பார் என்கிற பொலிஸ் அதிகாரியின் செயல்பாட்டை இப்பொதுக் குழு மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன், சட்டத்தை மீறி அமைதிக்கு குந்தகம் விழைவிக்கும் விதமாகவும், மத நிந்தனை செய்யும் விதமாகவும் நடந்து கொண்ட கப்பார் என்ற பொலிஸ் அதிகாரிக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம் – 10
கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும் ஹிஜாப் பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும். ஹிஜாப் முறை என்பது பெண்களின் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் பாதுகாத்து தூய்மையான சமுதாயத்தை உறுவாக்குவதற்காக இஸ்லாம் காட்டிய வழிமுறையாகும். முஸ்லிம் சமுதாயப் பெண் பிள்ளைகள் பாடசாலை, கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகத்திற்கு செல்லும் போது ஹிஜாப் அணிந்து செல்வதற்கு சில சிங்கள மொழிப் பாடசாலைகளிலும், கிருத்தவ கல்லூரிகளிலும் சில பல்கலைக் கழங்களிலும் முஸ்லிம் பெண்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஹிஜாப் அணிந்து பாடசாலை முதல் பல்கலைக் கழகம் வரை முஸ்லிம் பெண் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு செல்ல முடியும் என்பது இலங்கை அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள மிக முக்கியமான உரிமைகளாகும், மேலும் கடந்த 1980 ம் ஆண்டு கல்வி அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவுறுத்தலுக்கு அமைய முஸ்லிம் மக்களின் ஹிஜாப் உடை ஒரு பாடசாலை உடையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இதனை பல சந்தர்ப்பத்தில் உச்ச நீதிமன்றமும் உறுதிப் படுத்தியுள்ளது. இந்த உரிமையை பரிக்கும் விதமாக செயல்படும் பாடசாலைகள் மற்றும் அதிகாரிகளுக்கு அரசு இது தொடர்பான சட்ட விளக்கங்களை வழங்குவதுடன், சட்டத்தை மீறி செயல்படும் பாடசாலைகள் மற்றும் அதிகாரிகள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கின்றது.
தீர்மானம் – 11
கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் பிள்ளைகளை காலில் விழுந்து வணங்க சொல்வது சட்டத்திற்கு புறம்பானது. மாற்று மொழி பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் மாணவ, மாணவியரை ஒரு சில பாடசாலை ஆசிரியர்களும் அதிபர்களும் தமது காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று வற்புறுத்தும் சம்பவங்கள் பாடசாலைகளில் நடைபெறுகின்றன. இஸ்லாமிய மார்க்கத்தை பொருத்த வரையில் யாரும் எவர் காலிலும்விழுந்து வணங்க கூடாது. அப்படி வணங்குவது இறைவனை மறுக்கும் இணை கற்பித்தலுக்குறிய குற்றமாகும் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. புனிதமிக்க இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம் மாணவர்களை காலில் விழுந்து வணங்கச் சொல்வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மத உரிமையை பரிக்கும் செயலாகும். இலங்கை அரசியல் சாசனத்தின் 10, 12, 14 ஆகிய ஷர்த்துக்களில் ஒவ்வொரு நபருக்கும் தான் விரும்பும் மார்க்கத்தை ஏற்று பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்படியான மத உரிமைகளை பரிக்கும் ஆசிரியர்கள், அதிபர்கள், அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக் குழு அரசிடம் கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம் – 12
பாடசாலைகளில் ஆபாசமற்ற ஆடை முறை நடைமுறைப் படுத்தப் பட வேண்டும். பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான ஆடை முறையில் அரசு மாற்றம் செய்ய வேண்டும். அங்கங்களை வெளிப்படுத்தும் விதமாக இருக்கமாகவும், அரை குறையாகவும் அமையும் ஆபாசத்தை உண்டாக்கும் ஆடை முறைகளே கற்பழிப்பு, மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல சமூக சீர்கேட்டுக்கு காரணமாக அமைகின்ற காரணத்தினால் பாடசாலைகளில் அனைத்து மாணவர்களுக்கும் ஆபாசமற்ற ஆடை முறையை அரசு நடைமுறைப் படுத்த வேண்டும் என்று இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.
தீர்மானம் – 13
ISIS இயக்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஈராக், சிரியா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ISIS தீவிரவாத அமைப்பு என்பது உலகில் உள்ள அனைத்து தீவிரவாத அமைப்பை விடவும் பயங்கரமானதாகும். சர்வதேச மட்டத்தில் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் இவ்வமைப்பு தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இஸ்லாம் கற்றுத் தரும் போர் நெறிமுறையான ஜிஹாதை தவறாக புரிந்து கொண்ட இந்த அமைப்பினர் தாம் இஸ்லாத்திற்காக போராடுவதாக கூறிக் கொண்டு அப்பாவி பொது மக்களையும், ஊடகவியலாளர்களையும்,கொலை செய்வதுடன், கைதியாக பிடிக்கப்படுபவர்களை தீயிட்டு எறித்து கொலை செய்யும் காரியத்தில் இவர்கள் ஈடுபடுகின்றார்கள். தீயிட்டு கொலை செய்வது என்பது இஸ்லாம் வன்மையாக கண்டித்த செயலாக இருக்கும் போது, ஜிஹாதின் பெயரால் இவர்கள் செய்யும் இந்த அநியாயங்கள் இஸ்லாத்தின் நற்பெயருக்கு கேடாக அமைந்துள்ளது. ISIS என்ற இந்த இயக்க செயல்பாடுகளுக்கும் புனித இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பொது மக்கள் இவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அத்துடன், இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் போன்றதொரு தோற்றத்தை இனவாத அமைப்புகள் உண்டாக்க முயல்கின்றன. இலங்கை முஸ்லிம்களைப் பொருத்த வரையில் எக்காலத்திலும் தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் அல்ல. இலங்கையில் எவ்வித இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் அமுலில் இல்லை என்று சர்வதேச இன ஆய்வு நிறுவனமும் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கை இதை இன்னும் உறுதி செய்துள்ளது. நிலைமை இவ்வாறிருக்கும் போது, பெரும்பான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும் விதமாக பரப்புரை மேற்கொள்ளும் இனவாத இயக்கங்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கின்றது.
அத்துடன், ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதின் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசிடம் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.
தீர்மானங்கள் எட்டிக்கடப்பதன் மர்மம் என்ன ?
ReplyDeleteP.J இன் விசாவினை ரத்துச் செய்ததற்காக நாட்டில ஆட்சிய கவிழ்ப்பதாக பத்திரிகை மாநாடு நடத்தினீர்களே அதனையும் இந்த தீர்மானத்தில் உட்படுத்தலாமே
ReplyDeleteTo be a Muslim do we have to follow any of these groups? it's kind of "fashion" in Sri Lanka.
ReplyDeletePJ , ஜாகிர்நாயக் இலங்கை வருவார்கள்
ReplyDelete