Header Ads



முழு பாராளுமன்றமும், அரசியலமைப்புப் பேரவையாக மாறியது

புதிய அரசியலமைப்தைத் தயாரிப்பதற்காக, முழு பாராளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக, இன்று செவ்வாய்க்கிழமை (05) மாற்றமடைந்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (05) கூடியபோது, முதல் முறையாக முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்புச் சபையாக மாற்றம் நிகழ்வு இடம்பெற்றது.

மக்கள் வாக்குகளால் தெரிவான அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசியலமைப்புச் சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக இதன்போது சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அரசியலமைப்புச் சபைக்கான 7 உப தலைவர்களின் பெயர்களை சபை முதல்வர் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல சபையில் முன்வைத்தார்.

இதன் பிரகாரம் பிரதித் தலைவர்களாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, செல்வம் அடைக்கலநாதன், கபீர் ஹாஷிம், சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, திலக் மாரப்பன, மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.

No comments

Powered by Blogger.