Header Ads



பூஜித் ஜயசுந்தரவின் தெரிவு சட்டவிரோதமானது - உதய கம்மன்பில

புதிய பொலிஸ்மா அதிபரின் தெரிவானது சட்டவிரோதமானது என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -19- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபை மூலம் புதிய பொலிஸ்மா அதிபரை தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு சபையானது பொதுமக்களினது பிரார்த்தனைகளை சிதறடித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.