Header Ads



டபள் கேம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டங்களின் போது ஏற்படுத்தப்பட்டு வரும் குழப்பங்கள் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பங்கேற்ற கிராமங்களில் நடைபெற்ற பல கூட்டங்களுக்கு இவ்வாறு இடையூறு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

காலி மாவட்டத்தில் அண்மையில் இவ்வாறு கூட்டமொன்று நடத்தப்பட்டிருந்தது. காலி பெத்தகனே பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கும் இவ்வாறு குழுமியிருந்தவர்கள் கூக்குரல் எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். எனினும் கூக்குரல் காரணமாக பேசாமலேயே மேடையை விட்டு சென்று விட்டார்.
இந்தக் கூட்டத்தை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம ஏற்பாடு செய்திருந்தார்.

குழுமியிருந்தவர்களை சத்தமிட வேண்டாம் என கேட்ட போதும், குழுமியிருந்தவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

எனினும், கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த பிரதி அமைச்சரே கூட்டத்தை குழப்பவும் ஏற்பாடு செய்திருந்தார் எனவும், மதுபானம் வழங்கி கூக்குரல் இடுமாறு பணிப்புரை விடுத்திருந்தார் எனவும் கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

கூட்டம் கலைந்த பின்னர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் இது பற்றி பேசிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.