Header Ads



இலங்கை முஸ்லிம்களே, இது உங்களின் கவனத்திற்கு..!

இலங்­கையில் ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களை தடுப்­ப­தற்­காக விசேட கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­கின்­றன என சட்டம், ஒழுங்கு  மற்றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்­ச­ரான சாகல ரட்­நா­யக்க தெரி­வித்தார். 

தெஹி­வளைப் பகு­தியில் ஐ.எஸ். உடன்   தொடர்புடைய எவரும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை எனவும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்றில் நேற்று -05-04-2016 செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற வாய்­மூல விடைக்­கான வினா­வின்­போது ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான எஸ்.எம். மரிக்கார் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு அமைச்சர் சாகல ரட்­நா­யக்க பதி­ல­ளித்தார்.

கடந்த மூன்­று­மாத காலப் பகு­தியில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் கௌடான பகு­தியில் தேடுதல் நட­வ­டிக்­கை­யொன்று இடம்­பெற்­றதா? இப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள வீடொன்றில் தற்­கொலை குண்­டு­க­ளுடன் நபர்கள் கைது செய்­யப்­பட்­ட­னரா? அவர்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்ட தக­வல்கள் என்ன? இப்­பி­ர­தே­சத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் கைது செய்­யப்­பட்­ட­னரா? 

அவ்­வா­றான சம்­பவம் இடம்­பெ­றா­தி­ருப்பின் அச் சம்­பவம் தொடர்­பாக தகவல் வெளி­யிட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை என்ன? இலங்கை குறித்த பயங்­க­ர­வாத அவ்­வ­மைப்­பிற்­கான உறுப்­பி­னர்­களை இணைத்துக் கொள்­வ­தற்­கான இட­மா­கு­மென புல­னாய்வுப் பிரி­வினால் இனங் காணப்­பட்­டுள்­ள­தா­வென மரிக்கார் எம்.பி. கேள்­வி­களை முன்­வைத்தார்.

இவ்­வி­னாக்­களை முற்­றாக நிரா­க­ரித்த அமைச்சர் சாகல ரட்­நா­யக்க கூறு­கையில், இலங்­கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களின் செயற்­பா­டுகள் உள்­ள­னவா என்­பது தொடர்பில் பரந்­த­ளவில் தொடர்ச்­சி­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. உலகில் இவ்­வாறு செயற்­படும் பல குழுக்கள் தொடர்ச்­சி­யாக கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. நாம் அவ்­வா­றான குழுக்கள் தொடர்பில் சர்­வ­தேச புல­னாய்வு அமைப்­பு­க­ளுடன் பரி­மாற்­றங்கள் மேற்­கொண்டு தொடர்பில் உள்ளோம்.

இவ்­வா­றான பயங்­க­ர­வாத அமைப்­புக்­களின் செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்கு பல நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், சமை­யத்­த­லை­வர்கள், முஸ்லிம் சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் திணைக்­களம், அகில இலங்கை ஜம்­இ­யத்துல் உலமா, சூரா கவுன்சில் போன்­ற­வற்­றுடன்  இணைந்து கடும் போக்­கு­டைய  சமய அமைப்­புக்கள் ஊடாக இலங்கை முஸ்­லிம்கள் கடும் போக்­கான செயற்­பா­டு­களின் பக்கம் கவனம் செலுத்­து­வதை தடுப்­ப­தற்­கான சம­ய­ரீ­தி­யான கலந்­து­ரை­யா­டல்கள், விழிப்­பு­ணர்வு ஊட்டல் மேற்­கொள்­ள­வுள்ளோம். ஆசி­ரி­யர்கள் மற்றும் பெற்­றோர்­களை  இணைத்து  பாட­சாலை முறை­மை­யினுள் மாணவர் இணைப்பை அனைத்து இனங்­களும் உள்­ள­டக்­கப்­ப­டும வகையில் மாற்­றி­ய­மைக்­கப்­படும். 

அத்­துடன் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் மற்றும் முஸ்லிம் பயங்­க­ர­வாதம் செயற்­படும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து திரும்­பு­கின்ற முஸ்லிம் இனத்­த­வர்கள் இந்­நாட்­டி­லுள்ள கடும் போக்­கா­ளர்­களின் குடி­வ­ரவு, குடி­ய­கல்வு செயற்­பா­டுகள் தீவி­ர­மாக கண்­கா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளன. 

இணை­யத்­த­ளத்தின் சமூக வலை­ய­மைப்­புக்கள் ஊடாக கடும் போக்குடைய கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுத்தல், பாதிப்புக்கள் ஏற்படுத்துவதுடன் வெளியீடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல், கடும் போக்குடைய கருத்துக்களை கொண்ட கணக்குகளை தடுத்தல்.

கடும் போக்குடைய சஞ்சிகைகள் வெளியாகும் இடங்கள்,பரப்புவதற்கான சொற்பொழிவுகளை ஆற்றுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

1 comment:

  1. Jamaath, Jamaath endru sollikkondu waytrup pilappukkahe iyangum very pidththa iyakkangalin piththalaatangalay neengalum publish panna wendaam

    ReplyDelete

Powered by Blogger.