சோபித தேரரின் மரணம் தொடாபில், ஏன் விசாரணை நடத்தவில்லை - நீதிமன்றம் கேள்வி
மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடாபில் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சோபித தேரரின் மரணம் குறித்து பிரேதப் பரிசோதனை நடத்தப்படாமைக்கான காரணத்தை விளக்கி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜயசிங்கவிற்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு எலன் மெதினியாராமயவின் விஹாராதிபதி உடுவே தம்மாலோக தேரரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த அறிக்கையை பரிசீலனை செய்த நீதவான் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சோபித தேரருக்கு சிகிச்சை அளித்த கொழும்பு தேசிய வைத்தியசாலை, சென்ட்ரல் வைத்தியசாலை, நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை மற்றும் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலை ஆகியவற்றினால் அளிக்கப்பட்டுள்ள மருத்துவச் சான்றிதழ்கள், அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றியும் கருத்திற் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment