அடுத்த புத்தாண்டில் புதிய, அரசாங்கமொன்று ஆட்சியமைக்கும் - அமைச்சர் டிலான்
அடுத்த புத்தாண்டில் புதிய அரசாங்கமொன்று ஆட்சி அமைக்கும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மஹவ பக்மீவௌ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்துரைத்த அவர்,
மூளைக்கு மேல் ஏறி இருந்து கொண்டு செயற்பட முடியாது. தந்திரோபாயமாக செயற்பட வேண்டும். மூளை மீது ஏறி நின்று கொண்டு செயற்படுபவர்களே நரிகளைப் போன்று கூக்குரல் எழுப்புவார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாம் மக்களுக்காக குரல் கொடுத்தோம். கூக்குரல் இடவில்லை. சிவனொளிபாத மலைக்கு இரண்டு பாதைகளில் பயணிக்க முடியும்.
ஹற்றன் வழியாகவும் இரத்தினபுரி வழியாகவும் செல்ல முடியும். அதேபோன்று எமது நண்பர்கள் சிலர் இரண்டு வேறு வழிகளில் ஒரே நோக்கத்திற்காக செயற்பட்டு வருகின்றனர்.
இதேவேளை இம்முறை புத்தாண்டு காலத்தில் பால் பொங்கும் போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பச்சை நிற ஆடை அணிந்திருந்தனர்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு என்பதனால் இவ்வாறு அவர்கள் ஆடை அணியவில்லை. இந்த ஆண்டு சுப நிறமாக பச்சை குறிப்பிடப்பட்டிருந்தது.
நானும் டி.பி.ஏக்கநாயக்கவும் சுப நிறமாக இருந்த போதிலும் பச்சை நிறத்தை அணியவில்லை. ஏனென்றால் அவ்வாறு பச்சை நிறத்தில் ஆடை அணிவது எமக்கு ஒரு மாதிரியான அசௌகரியமாக காணப்படுகின்றது.
எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியும் புதிய அரசாங்கமொன்றும் ஒரே கட்சிக்கு கிடைக்கும் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதைத்தான் 'ஒப்பாரி' அல்லது 'பிலாக்கணம் வைத்து அழுவது' என்பது!
ReplyDelete