சாரதி அனுமதிப் பத்திரத்தை, பறிக்கப்போகும் புள்ளித் திட்டம்
பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு புள்ளிகளை வழங்கும் நடைமுறையை இந்த வருட காலப்பகுதிக்குள் செயற்படுத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்துஆணையாளர் திணைக்களம் ஆராய்ந்து வருகின்றது.
இந்த திட்டத்தில் காணப்பட்ட செயற்பாட்டு ரீதியான சிக்கல்கள் காரணமாக அதனை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் அதில் காணப்படும் சிக்கல் நிலைமைகளை தீர்த்து இந்த வருடத்திற்குள் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் ஆராய்ந்து வருகின்றது.
இந்த புள்ளி வழங்கும் திட்டத்திற்கமைய வாகன விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் பாதுகாப்பற்ற வகையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு அந்தந்த சம்பவங்களுக்கமைய ஒதுக்கப்பட்டுள்ள புள்ளிகளை வழங்கவும் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெறுவோரின் சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யும் வகையிலுமே இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
traffic policekku incom koodappohuthu
ReplyDeleteநல்ல திட்டம் ஆனால் நம் நாட்டு போலிஸ் அதிகாரிகள் புதிய கட்டுடத்துக்கான அத்திவாரத்தை இடுவதற்கு வழி வரப்போகிறது என்பது மட்டும் உண்மை
ReplyDelete